ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய் யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரியவதனா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்தவழக்கில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தகுதி தேர்வை அரசு நடத்தி வருகிறது. இதில் வாங்கிய மார்க் அடிப்படையில் மட்டும் ரேங்க் பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.ஆனால் அரசு கடந்த 2012ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி தகுதி தேர்வு மார்க் தவிர மற்ற பட்டய படிப்பு, பட்டப்ப டிப்பு, பிளஸ் 2 மார்க் ஆகியவற்றிற்கு தனி மார்க் கொடுக்கிறார்கள். இதனால் அதிகமாக மார்க் வாங் கிய நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.
எனவே தகுதி மார்க் தவிர மற்ற படிப்பை கணக்கிட்டு மார்க் வழங்க வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வக்கீல் நாமோ நாராயணன் ஆஜா ரானார். வழக்கை விசாரி த்த நீதிபதி வரும் 28 ம் தேதி அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத் தரவிட்டார்.
1 comment:
OVVORU TET MAARKKUM ATHIGAPATCHA SIRAMAPPATTU VAANGINOM. SO,TRB MAATHIRI TET MAARKA MATTUM PAARTHU POSTING PODANUM. INIVARUM KAALANGALIL PLUS2,DEGREE MARKKA MEAN PANNALAM. THANIYAAR KALVI NILAYANGAL VANTHA PINNADI THAAN ELLA MAARKKUM ADHIGAMA VARUTHU. ILLANNA SENIOR CANDIDATESKKU MATTUM IMPROVEMENT ELUTHA ANUMATHIKKANUM. PUTHIYA KOLGAI AMULAAKKUMPOTHU ELLA VAGAI MAANAVARGALAIYUM MEAN PANNAVENDAMA.
Post a Comment