Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 4, 2014

    வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது நிதி மந்திரி ப.சிதம்பரம்

    வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். இந்த பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. வருகிற ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால், புதிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வது வரையிலான மாதங்களுக்கு செலவினங்களை மேற்கொள்ள செலவு மானிய கோரிக்கை (இடைக்கால பட்ஜெட்) இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இதுபற்றி நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
    17–ந்தேதி தாக்கல்
    மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வருகிற 17–ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறேன்.
    2004–ம் ஆண்டில் அப்போதைய நிதி மந்திரி ஜஸ்வந்த்சிங் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் உரை 12 பக்கங்களை கொண்டதாகவும், அதன்பிறகு 2009–ம் ஆண்டு அப்போதைய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் உரை 18 பக்கங்களை கொண்டதாகவும் இருந்தது. 17–ந்தேதி நான் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட் உரை 12 முதல் 18 பக்கங்கள் வரை இருக்கலாம்.
    வருமான வரி சட்டம்
    வருமான வரி சட்டத்திலோ அல்லது சுங்கவரி சட்டத்திலோ அல்லது கலால் வரி சட்டத்திலோ திருத்தம் செய்யும் யோசனை எதுவும் இல்லை. ஆனால் சட்ட திருத்தம் தேவைப்படாத மாற்றங்களை செய்து கொள்ள முடியும். கடந்த வாரத்தில் இரு திருத்தங்களை செய்து இருக்கிறோம். அரசின் பதவிக்காலம் முடியும் வரையில் அத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். (எனவே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இடைக்கால பட்ஜெட்டில் கலால் மற்றும் சேவை வரிகளில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது.)
    காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 29 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் காப்பீட்டு மசோதா இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுமா? என்று கேட்கிறீர்கள். அந்த மசோதாவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் தெளிவாக இருக்கின்றன. பொருட்கள் மற்றும் சேவை வரி தொடர்பாகவும் மாநிலங்களிடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.
    ஷா கமிஷன் அறிக்கை
    சட்டவிரோதமாக வைப்புத்தொகை திட்டங்களுக்கு நிதி திரட்டுவதை ஒழுங்குபடுத்த வகை செய்யும் செபி சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. அந்த குழு இன்னும் ஓரிரு தினங்களில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றுவது அவசியம் என்ற போதிலும், இது தொடர்பாக இதுவரை யாரும் உத்தரவாதம் அளிக்காதது வருத்தம் அளிப்பதாக உள்ளது.
    சட்ட விரோத சுரங்கங்கள் தொடர்பாக ஆய்வு நடத்திய நீதிபதி எம்.பி.ஷா கமிஷனின் அறிக்கை, நடவடிக்கை அறிக்கையுடன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
    இவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

    No comments: