Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 12, 2014

    சிவில் சர்வீஸ் தேர்வில் புதிய சலுகை - மத்திய அரசு ஒப்புதல்

    2014ம் ஆண்டில் நடைபெறவுள்ள சிவில் சர்வீஸ் தேர்வு முதல், அனைத்து பிரிவினருக்கும், கூடுதலாக இரண்டுமுறை சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் வாய்ப்புகளை வழங்கும் முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த 2014ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வின் முதல் நிலைத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவில் சர்வீஸ் தேர்வானது, முதல்நிலைத் தேர்வு (Preliminary exam), மெயின் தேர்வு(Main exam) மற்றும் நேர்முகத் தேர்வு(Personal Interview) ஆகிய மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

    இதற்கு முன்னதாக, பொதுப்பிரிவை(OC) சேர்ந்தவர்களுக்கு, அதிகபட்சம் 30 வயதுவரை எழுதும் சலுகையும், அதிகபட்சம் 4 முறை எழுதும் சலுகையும் இருந்தது. OBC பிரிவினருக்கு, அதிகபட்சம் 33 வயதுவரை எழுதும் சலுகையும், அதிகபட்சம் 7 முறை தேர்வெழுதும் சலுகையும் இருந்தது. SC/ST பிரிவினர், அதிகபட்சம் 35 வயதுவரை எத்தனைமுறை வேண்டுமானாலும் தேர்வையெழுதும் சலுகை இருந்தது.

    தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம், OC மற்றும் OBC பிரிவினர் பலன் பெறுகின்றனர். அவர்கள் தங்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட உச்ச வயதுவரம்பு சலுகைக்குள், கூடுதலாக இரண்டு attempt -களை மேற்கொள்ளலாம். OC வகுப்பினர் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 4 attempt என்ற நிலையிலிருந்து 6 attempt என்ற சலுகையையும், OBC பிரிவினர், தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 7 attempt என்ற நிலையிலிருந்து 9 attempt என்ற சலுகையையும் பெறுவார்கள்.

    அதேபோல், கடந்த 1980, ஜனவரி 1ம் தேதி முதல், 1989ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இயல்பாகவே வசித்தவர்களுக்கு, அவர்கள் எந்தப் பிரிவாக இருந்தாலும், அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயதுவரம்பு சலுகை உண்டு.

    மேலும், பாதுகாப்பு படைகளில் பணிபுரிந்து, பணி காரணமாக உடலில் ஊனம்பெற்ற நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை வயதுவரம்பு சலுகை உண்டு.

    கண்பார்வை அற்றவர்கள், ஊமை - செவிடு மற்றும் கை - கால் ஊனமுற்றவர்களுக்கு, 10 ஆண்டுகள் வரை வயதுவரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

    No comments: