அரசாணை எண்: 242 (22.7.2013)ன் படி தர ஊதியம் ரூ.5,100ம், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் உட்பட பல்வேறு துறை பணி அலுவலர்களுக்கு தனி படியாக வழங்கப்படும் ரூ.1000ம் போன்றவற்றை முதுகலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.
என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில தலைவர் மணிவாசகன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் திருஞானகணேசன், மாநில மகளிர் அணி செயலாளர் வசந்தா, மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர், தஞ்சை மண்டல செயலாளர் எழிலரசன், திருவாரூர் மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் நடராஜன் வரவேற்புரையாற்றினார்கூட்டத்தில்,அரசாணை எண்: 242 (22.7.2013)ன் படி தர ஊதியம் ரூ.5,100ம், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் உட்பட பல்வேறு துறை பணி அலுவலர்களுக்கு தனி படியாக வழங்கப்படும் ரூ.1000ம் போன்றவற்றை முதுகலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிடவேண்டும்.
கடந்த 1987&88 கல்வியாண்டில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும், கடந்த 2003&04ம் கல்வியாண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும்அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் பணிவரன் முறை செய்ய வேண்டும்.ஆதிதிராவிட நலப்பள்ளி, கள்ளர் சீரமைப்பு பள்ளி, மாநகராட்சி பள்ளி ஆகிய பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அலகுவிட்டு அலகு மாற நிரந்தர ஆணை வழங்க வேண்டும்.தேர்வுக்கான உழைப்பு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.விடைத்தாள் திருத்தும் பணிக்கு தாள் ஒன்றுக்கு ரூ.20 என உயர்த்தி வழங்க வேண்டும்என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment