Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, February 22, 2014

    தமிழகத்தில் நாளை 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்

    தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு, 43,051 மையங்கள் மூலம், நாளை 2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஜனவரி 19ம் தேதி மற்றும் பிப்ரவரி 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
    2ம் கட்டமாக நாளை தமிழகம் முழுவதும் 2ம் கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் உள்பட 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டாம் தவணையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) சொட்டு மருந்து டுக்கப்படுகிறது. சென்னையில் மாநகராட்சி சார்பில் 2ம் கட்ட தவணையாக நாளை சென்னை முழுவதும் 1,325 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    No comments: