Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, February 21, 2014

    ஆசிரியர் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் பேர் பார்டரில் பாஸ்

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் பேர், குறைந்தபட்ச அளவான 82 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 26 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர். 


    அப்போது தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மதிப்பெண்) ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.அதன்பின்னர், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டும் 5 சதவீதம் சலுகை அளித்து,தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டது.அதன்படி, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 150-க்கு 82.5 வரும், ஆனால், தகுதித்தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்தான் வழங்கப்படும். அரை மதிப்பெண் வழங்க வாய்ப்பு இல்லை.

    10 ஆயிரம் பேர் தப்பினர்

    எனவே, தேர்ச்சி மதிப்பெண் 82.5 என்பதை முழு எண்ணாக மாற்றி 83 ஆக நிர்ணயிக்கப்படும் என்று தேர்வெழுதியவர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ. தகுதித்தேர்வைப் போன்று தமிழக அரசும் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை 82 என நிர்ணயித்தது. அதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டது.ஐந்து சதவீத மதிப்பெண் குறைப்பால் தற்போது கூடுதலாக 48 ஆயிரம் பேர் தேர்ச்சிஅடைந்துள்ளனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் 82 மதிப்பெண் எடுத்து மயிரிழையில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 82 முதல் 89 மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் வெயிட்டேஜ் மார்க் 36 கிடைக்கும்.

    வேலை கிடைக்குமா?

    5 சதவீத மதிப்பெண் சலுகையால் புதிதாக தேர்ச்சி பெற்றிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட்., தேர்வில் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ்-2, ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு) அதிக மதிப்பெண் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    5 comments:

    Anonymous said...

    Please amma . Cv complete panniyavargaluku posting podunga amma.because ettanayo students education loan vangierukkanga.please amma posting podunga

    Unknown said...

    PLEASE CONSIDER ABOVE 40AGE AGED CANDIDATES THEY ARE SUFFERING A LOT KINDLY GIVE PREPARENCE FOR THEM THEY ARE WORKING IN PRIVATE SCHOOLS. THEY GOT LOT OF EXPERIENCE. SO PLEASE PLEASE CONSIDER THOSE SUCH PERSONS. THEY ECONOMICALLY WEAK

    Anonymous said...

    Hai cv mudicha fds namalaium relaxation students rendu peraiyum serthu than job poda poranga.yar weitage athikamo avangaluku job..job June than

    Anonymous said...

    tet paper 1 67 weightage ku posting kidaikuma

    Anonymous said...

    paper 1 ku entha weightage varai job kudupanga