Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 6, 2013

    பட்டதாரி ஆசிரியராக உட்படுத்திட வலியுறுத்தி பிப்ரவரி 26ல் மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்திட வலியுறுத்தி பிப்ரவரி 26ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் 20-01-2013 அன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் சு. கயத்தாறு தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் அ. அருணகிரியார், துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் தலைமைச் நிலையச் செயலாளர் ச. வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்டச் செயலாளர் பால முருகன் வரவேற்றார். சென்ற கூட்ட முடிவுகளை அறிக்கையாக பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் விவாதத்திற்கு வைத்தார். திருத்தம் இன்றி அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அமைப்புச் செயலாளர் இணை பொறுப்பாளர் தேர்வை நடத்தினார். நாமக்கல் பெரியசாமி, சிவகங்கை சங்கர் மாநிலதுணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலப் பொருளாளர் ஆ. மதலைமுத்து வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

    கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    அரசு / அரசு உதவி பெறும், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் 25,000 இடைநிலை ஆசிரியர்களை அவர்கள் பணியிடங்களை அரசாணை எண் 100, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 27.06.2003ன் அடிப்படையில் தரம் உயர்த்தி பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட தமிழக அரசை வலியுறுத்துவது என தீர்மானிக்ப்பட்டது.
    இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்திட வலியுறுத்தி வரும் பிப்ரவரி 26ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
    வரும் பிப்ரவரி 20, 21 தேதிகளில் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வு, மானியங்களை வங்கி கணக்கில் செலுத்துவது, தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் இவற்றை கண்டித்து அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிலைறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் முழுமையாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
    தமிழ் உட்பட அனைத்து பாடங்களுக்குமான பதவி உயர்வு 31.12.2012 வரை கோரப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே காலியாக உள்ள 40,000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் விகிதாச்சார அடிப்படையில் (தமிழ் 66.66%, பிறபாடங்கள் 50%) பதவி உயர்வு வழங்கிட பள்ளிக்கல்வி செயலாளர் அவர்களை கேட்டு கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறும் இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக தரம் உயர்த்தி அதே பள்ளியிலேயே அந்த பணியிடத்திலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட பள்ளிக்கல்வி இயக்குனரை, இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களை கேட்டுக் கொள்வது என தீர்மானிக்ப்பட்டது.
    1987க்கு முன்பு ஆசிரியர் பட்டயப் படிப்பின் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு, எனவே அவ்வாறு பத்தாம் வகுப்பு படித்து பின்பு மேல்நிலைக்கல்வியுடன் இணைந்த ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை பதவி உயர்வில் சேர்த்து கொண்டது போல், ளுளுடுஊ முடித்து (னு.வு.நு.) எனப்படும் ஆசிரியர் பட்டயப்பயிற்சி பெற்று பின்பு பட்டம் பெற்றவர்களின் பட்டியலை பதவி உயர்விற்கு அனுமதிக்க சென்னை உயர்நீதி மன்றம் செப்டம்பரில் இட்ட ஆணையை அமல்படுத்திட பள்ளிக்கல்வி செயலரை கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
    2012-13 உறுப்பினர் சந்தா சேர்ப்பை முழுவீச்சில் மேற்கொண்டு மார்ச் 31க்குள் முடித்திட தீர்மானிக்கப்பட்டது.
    "நமது முழக்கம்" இதழ் சந்தா ரூ.100 விதம் பெற்று முதலில் மாவட்டத்திற்கு 100 பேர் வீதம் மாநில மையத்திற்கு ஒப்படைப்பு செய்திட தீர்மானிக்கப்பட்டது.
    இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தை PB1லிருந்து PB2க்கு மாற்றி 9,300 – 4,200 என மாற்றிடவும், தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு ஊதிய விகிதம் தொடர்ந்திடவும் மூன்று நபர்குழு அறிக்கையை முழுமையாக வெளியிடவும் தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    அனைத்து மாவட்டங்களிலும் கிளையை உறுதிபடுத்திட மண்டல பொறுப்பாளர்களும் மாநில பொறுப்பாளர்களும் தீவிர முயற்சி எடுத்து இறுதிபடுத்திட தீர்மானிக்கப்பட்டது.

    No comments: