Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, February 23, 2013

    குரூப்-2 தேறியவர்களுக்கான நேர்முகத்தேர்வு தொடக்கம்

    குரூப்-2 நேர்முகத் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், துவங்கியது. நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள, 3,631 பணியிடங்களை நிரப்ப, கடந்த நவ., மாதம் குரூப்-2 தேர்வு நடந்தது.
    இதன் முடிவுகள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. மொத்த இடங்களில், 1,426 இடங்கள், நேர்முகத் தேர்வை உள்ளடக்கிய தேர்வாகும். மீதமுள்ள பணியிடங்கள், நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள். முதல்கட்டமாக, 1,426 பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு, நேற்று தேர்வாணையத்தில் துவங்கியது. இதற்கு, 2,852 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு, 450 பேர் வீதம், மார்ச், 1 வரை, தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடக்கிறது.

    No comments: