Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 25, 2013

    டி.இ.டி தமிழ் வினா - விடை: திருக்குறள்

    * இயற்றியவர் - திருவள்ளுவர். இவர் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்று கூறப்படுகிறது.
    * திருவள்ளுவரின் காலம் - கி.மு.31. இந்த ஆண்டு பற்றி தெளிவான சான்றும் கிடைக்கவில்லை. பெற்றோர் பற்றிய தெளிவான சான்றும் கிடைக்கவில்லை.

    * திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் - தெய்வப்புலவர், செந்நாபோதார், நாயனார், முதற்பாவலர், பொய்யில்புலவர், நான்முகனார், பெருநாவலர், மாதானுபங்கி, தேவர்.

    * திருக்குறள் - உலகப் பொதுமறை எனவும் முப்பால் எனவும் வாயுறைவாழ்த்து எனவும் அழைக்கப்படுகிறது.

    * திருக்குறள் - அறம் + பொருள் + இன்பம் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இயல்களின் எண்ணிக்கை 9.

    * திருக்குறளின் 3 பிரிவுகள்: அறத்துப்பால் 38 அதிகாரங்களும், பொருட்பால் 70 அதிகாரங்களும், காமத்துப்பால் 25 அதிகாரங்களும்.

    * திருக்குறள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

    * திருக்குறள் 133 அதிகாரங்களும், அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் கொண்டது.

    * திருகுறளுக்கு 10 பேர் உரையெழுதியுள்ளனர். அவற்றில் சிறந்த உரை பரிமேலழகர் எழுதிய உரை.

    குறிப்பு: திருவள்ளுவர் ஆண்டு: கிறிஸ்துவ ஆண்டு +31 அதாவது 2012 என்பது திருவள்ளுவர் ஆண்டில் (2012+31) 2043 என்று கூறுவோம்.

    * திருக்குறளின் சிறப்பு பெயர்: முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்திரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், பொருளுரை, முதுமொழி, திருவள்ளுவபயன்.

    * முயற்சி திருவினை ஆக்கும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.

    பொருள்: வையகம் - உலகம், நண்பு - நட்பு, மறம் - வீரம், புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர், வற்றல்மரம் - வாடியமரம், என்பு - எலும்பு, ஆர்வலர் - அன்புடையர், வழக்கு - வாழ்க்கைநெறி.



    If the fire is small the wind puts it out
    If the fire is mighty, even the wind helps it grow.

    சின்ன நெருப்பாய் திறமை இருந்தால்
    காற்று அதனை அணைக்கும்!
    காட்டு நெருப்பாய் திறமை இருந்தால்
    காற்றே அதனை வளர்க்கும்!

    No comments: