Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 25, 2013

    டி.இ.டி தமிழ் வினா - விடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா

    *    உ.வே.சா - உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்.
    *    உ.வே.சாவின் இயற்பெயர்- வேங்கடரத்தினம், அவரது ஆசிரியர் அவருக்கு சூட்டிய பெயர் - சாமிநாதன்.

    *    உ.வே.சா பிறந்த ஊர் - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்.
    *    உ.வே.சாவின் காலம் - 19.02.1855 முதல் 24.04.1942 வரை
    *    உ.வே.சாவின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை.
    *    உ.வே.சாவின் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் 1942ல் நிறுவப்பட்ட நூல் நிலையம் இன்றும் செயல்பட்டு வருகிறது.
    *    உ.வே.சா ஓலைச்சுவடிகளை பதிப்பித்ததால் பதிப்புத்துறையின் வேந்தர் என அழைக்கப்படுகிறார்.
    *    உ.வே.சாவுக்கு திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் நினைவு இல்லம் உள்ளது.
    *    உ.வே.சாவுக்கு தட்சணாமூர்த்தி கலாநிதி என்று பெயர் வழங்கியவர் - சங்கராச்சாரியார்.
    *    உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் "என் சரிதம்" (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
    *    உ.வே.சா ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஆற்றில் விடப்பட்ட ஒலைச்சுவடியை எடுத்து படித்து புதுப்பித்தார்.
    *   குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர் - கபிலர்.
    *   குறிஞ்சிப் பாட்டு எந்த நூல்களுள் ஒன்று - பத்துப்பாட்டு
    *   கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான பூக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
    *   உ.வே.சாவின் தமிழ் பணிகளை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்: ஜி.யு.போப், சூலியல் வின்சோன்.
    *   2006-ஆம் ஆண்டு உ.வே.சா. வைப் பெருமைப்படுத்தி அஞ்சல் தலை வெளியிட்டது மத்திய அரசு.
    உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
    எட்டுத்தொகை     -   8
    பத்துப்பாட்டு       - 10
    சீவக சிந்தாமணி   -  1
    மணிமேகலை      -   1
    சிலப்பதிகாரம்      -  1
    புராணங்கள்        -  12
    உலா -                  -   9
    கோவை          -        6
    தூது              -          6
    வெண்பா நூல்கள்  - 13
    அந்தாதி           -        3
    பரணி             -         2
    மும்மணிக்கோவை  - 2
    இரட்டைமணிமாலை - 2
    பிற பிரபந்தஸ்கள்    -   4

    *   ஓரிகாமி என்பது காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலை.
    *   ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.
    *   ஜப்பானில் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு இறந்த பெண் - ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சடகோ சசாகி.
    *   சடகோ சசாகிக்கு நம்பிக்கை தந்தவர் - தோழி சிசுகோ
    *   அக்குழந்தையின் நினைவிடம் உள்ள இடம்: ஹிரோசிமா நகரம்.
    *   அரவிந்த குப்தா எழுதிய நூலின் பெயர் - டென் லிட்டில் பிங்கர்ஸ்
    *   அவள் இறக்கும் முன் 644 காகித கொக்குகள் செய்தார்.
    *   டென் லிட்டில் பிங்கர்ஸ்(Ten Little Fingers) என்ற நூலை எழுதியவர்: அரவிந்த் குப்தா.
    *   உ.வே.சா. ஆற்றில் விட்ட ஓலைச்சுவடியை தேடி எடுத்த இடம் - கொடுமுடி(ஈரோடு மாவட்டம்)
    *   "பனை ஓலையை பக்குவப்படுத்தி அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவர்"-அவ்வாறு எழுதப்பட்ட ஓலைக்கு பெயர் ஓலைச்சுவடி.
    *   ஓலைச்சுவடி எழுத்துக்களில் எது இருக்காது -புள்ளி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது.
    இலக்கணம்:
    *   நாம் பேசும் மொழியை, எழுதும் மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது - இலக்கணம்.
    *   தமிழின் முதல் எழுத்து - அ
    *   "அ" என்ற எழுத்தின் I என்ற கோடு குறிப்பது - பழங்கால மனிதன் முதுக்கு பின்னால் வைத்திருந்த அம்புக்கூட்டை குறிக்கிறது.
    *   நட்பு எழுத்துக்களை மரப்பிலக்கணம் எவ்வாறு கூறுகிறது - இன எழுத்துக்கள்
    *  என்பு என்பதன் பொருள் - எலும்பு
    *  "ங்" என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து - க
    *  "ஞ்" என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து - ச
    ங்க - சிங்கம், ஞ்ச - மஞ்சள், ண்ட -பண்டம், ந்த - பந்தல், ம்ப - கம்பன், ன்ற - தென்றல்.

    Preparation Shows us the way
    Willpower guides our steps
    தயாரானால் வழிகள் உண்டாகும்
    தைரியமானால் படிகள் உண்டாகும்.

    No comments: