Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 25, 2013

    டி.இ.டி தமிழ் வினா - விடை: பறவைகள்

    *   பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்

    *   உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.

    *   நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.

    *   சமவெளி மரங்களில் வாழும் பறவைகள் - மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்குணாங்குருவி.

    *   நீர் நிலைகளில் வாழும் பறவைகள் - கொக்கு, தாழைக்கோழி, பவளக்காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.

    *   மலைகளில் வாழும் பறவைகள் - கிருவாச்சி, செந்தைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைக்காலி, பொன் முதுகு, மரங்கொத்தி, சின்னங்குறுவான், கொண்டை உழவாரன், இராசாளிப்பருந்து, பூமன் ஆந்தை.

    *  பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என அழைப்பர்.

    *  வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம் என அழைப்பர்.

    *  அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.

    *  அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.

    *  நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.

    *  தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்: வேடந்தாங்கல், கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்), கஞ்சிரால்குளம், சித்திரஸ்குடி, மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்), பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்), உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்), வடுவூர் (தஞ்சை மாவட்டம்) கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்), வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்), வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்), கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்), கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்).

    *   தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம்.

    No comments: