Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 25, 2013

    டி.இ.டி தமிழ் வினா - விடை: இசையமுது, பழமொழி நானூறு

    *  எழுதியவர் - பாரதிதாசன்

    *  இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
    *  சிறப்பு பெயர் - புரட்சிக்கவிஞர், பாவேந்தர்.

    *  காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)

    பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்

    திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.

    *  படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.

    *  கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.

    *  கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.

    *  இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.

    *  பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.

    *  யார் மீது கொண்ட காதலால் தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார் - பாரதியார் மீது கொண்ட காதலால்

    **  பொருள்: பொடி - மகரந்தப்பொடி, வானப்புனல் - வானத்து நீர்(மழை நீர்), தழையா வெப்பம் - பெருகும் வெப்பம், குறையாத வெப்பம், தழைக்கவும் - குறையவும்.

    பழமொழி நானூறு:

    *  ஆசிரியர் - முன்றுறை அரையனார், முன்றுறை - ஊர்ப்பெயர், அரையன் - அரசனைக் குறிக்கும் சொல்.

    *   பழமொழியில் உள்ள பாடல்கள் - 400

    * *  பொருள்:

    ஆற்றுணா வேண்டுவது இல் -"கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்"

    ஆற்றுணா - வழிநடை உணவு(கட்டுச்சோறு)

    குறிப்பு: ஆறு - ஒர் எண்(6), ஆறு - நதி, ஆறு - வழி.

    ஜவர்கர்லால் நேரு:

    *  நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவர்கர்லால் நேரு

    *  நேருவின் துணைவியார் பெயர் - கமலா

    *  தாகூர் ஆரம்பித்த விஸ்வபாரதி கல்லூரி மேற்குவங்கத்தில் சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ளது.

    *  நேரு தன் மகள் இந்திரா காந்திக்கும் 42 ஆண்டுகள்(1922-1964) கடிதம் எழுதியுள்ளார்.

    *  பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும் போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது.

    *  நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ளது. நேரு விரும்பி படித்தது - ஆங்கில நூல்கள்.

    *  போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய்

    *  அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல்.

    *  கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து.

    *  இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி.

    *  தழை என்பதன் பொருள் - செடிகொடி.

    ** குறிப்பு:

    *  சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.

    *  மில்டன் - ஆங்கில கவிஞர்.

    *  பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர்.

    *  காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்).

    *  டால்ஸ்டாய் - இரஸ்ய நாட்டு எழுத்தாளர்(போரும் அமைதியும் நாவல் - உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார்.

    *  பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்.

    *  பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர், கல்வியாளர்(நேருவுக்கு மிகவும் பிடித்த கல்விச் சிந்தனையாளர்).

    *  கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.

    *  நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில்  அதிகம் கூறியது - நூல்கள் பற்றி.

    ** குறிப்பு: உலகம் - ஞாலம், புவி - பூமி. முகில் - எழில், கொண்டல் - மேகம், மன்னன் - வேந்தன், கொற்றவன் -அரசன்.

    இலக்கணம்:

    *  ஓளியை உணர்த்தும் சொற்கள் இரண்டு இரண்டாக சேர்த்து வருவது, பிரித்தால் பொருள் தராது.

    எ.கா: கண கண, சல சல, தணதண, பட பட, குடுகுடு, வளவள, பளபள.

    *  சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள், இவர்கள் உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிப்பட்டவர்கள்.

    *  "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச் சித்தர்.

    *  உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் -கடுவெளிச் சித்தர்.



    ** பொருள்:

    *  சித்து - அறிவு

    *  கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54.

    *  நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் என்ப் பாடியவர் - கடுவெளிச் சித்தர்.

    *  பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகினிச் சித்தர் - இவை காரணப்பெயர்கள்.

    ** பொருள்:

    *  வேம்பு - கசப்பான சொற்கள்.

    *  வீறாப்பு - இருமாப்பு, கடம் - உடம்பு. சாற்றும் - புகழ்ச்சியாக்ப் பேசுவவது.

    *  கவிஞர் அப்துல் ரகுமானின் "ஆலா பனை" என்னும் நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.

    *  இவரின் பிற படைப்புகள்- சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.

    *  புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் - கவிக்கோ அப்துல்ரகுமான்.

    *  தாகம் என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது -பால் வீதி

    No comments: