கர்நாடக மாநிலத்தில் உள்ள, ராணி சன்னம்மா பெண்களுக்கான சைனிக் பள்ளியில், முதன்மை விடுதி காப்பாளராக பணியாற்ற விரும்புவோர் விண்ணப் பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெலகரி மாவட்டம் கிட்டூரில், ராணி சன்னம்மா ரெசிடென்சி மகளிர் பள்ளி, 1969ல் துவக்கப்பட்டது. இப்பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, சி.பி.எஸ்.சி., பாட திட்டத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள, பெண்களுக்கான ஒரே ஒரு சைனிக் பள்ளியான இங்கு, 830 மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில், முதன்மை விடுதி காப்பாளர், பள்ளி மனநல ஆலோசகர் பணியிடம் நிரப்பட உள்ளது.
முதன்மை விடுதி காப்பாளர் பணிக்கு, தகுதி வாய்ந்த முன்னாள் படைவீரர்களின் மனைவி அல்லது விதவைகள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலத்தில் புலமையும், ஒழுக்கத்தை கற்றுத் தருபவராகவும், நேர்மையும், கண்டிப்பு மிக்கவருமாக இருக்க வேண்டும்.
பள்ளி மனநல ஆலோசகர் பணிக்கு, இத்துறையில் படித்து பட்டம் பெற்ற அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபருக்கு, உணவும், இருப்பிடமும், பள்ளியிலேயே அமைத்து கொடுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, www.kittursainikschool.org என்ற இணையதளத்தை பார்வையிடலாம். விண்ணப்பிக்க விரும்புவோர், திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் தெரிவிக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment