பெட்ரோல், டீசலுக்கான, 'வாட்' வரியை, தமிழக அரசு திடீரென உயர்த்தி உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பெட்ரோல் மீதான வாட் வரியை, 27 சதவீதத் தில் இருந்து, 34 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை, 21.43 சதவீதத்தில் இருந்து, 24 சதவீதமாகவும் உயர்த்தி, தமிழக அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.78 ரூபாயும், டீசல் விலை லிட்ட ருக்கு, 1.76 ரூபாயும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில், அரசியல் ஸ்திரமற்ற ஆட்சி நடக்கும் நிலையில், மக்களை பாதிக்கும் இந்த விலைவாசி உயர்வு, ஏழை, நடுத்தர மக்களை கவலை யில் ஆழ்த்தி உள்ளது. தமிழக அரசின் வரி உயர் வுக்கு, பல தரப்பிலும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரி கள் சங்க பொதுச் செயலர், வேல்சங்கர் கூறியதாவது: வாட் வரியை உயர்த்தும் முன், அனைத்து மாநில கவுன்சிலை கூட்டி, மத்திய அரசு முடிவெடுக்கும். ஆனால், எந்த மாநிலமும், மத்திய அரசு நிர்ண யித்த அதிகபட்ச வரிக்கு அதிகமாக, வரியை உயர்த்த முடியாது.
இதுகுறித்து, அரசு தான் விளக்க வேண்டும். இந்த வரி உயர்வால், அத்தியா வசிய பொருட்களின் விலை கடுமையாகஉயரும்.பருப்பு, அரிசி போன்ற வற்றுக்கு,ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங் களை தமிழகம் நம்பி உள்ளது. அங்கிருந்து பொருட் களை கொண்டு வருவதற் கான, லாரி வாடகை அதிகரிக்கும் போது அவற்றின் சில்லரை விலையும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
அரிசி, பருப்பு விலை உயர்வு:
வாட் வரி உயர் வால், சரக்கு போக்குவரத்துக்கான லாரி வாடகை பெருமளவு அதிகரிக்கும். அதனால், அரிசி, பருப்பு, எண்ணெய், பழங்கள், காய்கறி கள், பால் பொருட்கள், மீன், கட்டுமான பொருட் கள், ஹோட்டல் உணவு பொருட்கள் போன்ற வற்றின் விலை உயரும். வாடகை ஆட்டோ, கார்கள் மற்றும் பள்ளி வாகன கட்டணங்களும் உயரும் அபாயம் உள்ளது.
No comments:
Post a Comment