Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 7, 2017

    ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம்?

    தகுதித்தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம் என்பது குறித்து நாம் ஆலோசனை கேட்டது – கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பேரறிஞர்கள், ஐ.ஏ.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தும் விரிவுரையாளர்கள் போன்றோர்களிடம் அல்ல.     நாம் நான்கு வகையானோரிடம் கருத்து கேட்டு தொகுத்துள்ளோம்.


    1. எவ்வாறெல்லாம் அலட்சியமாக செயல்பட கூடாது என்பதற்காக கடந்த தகுதி தேர்வில் 0 – 50 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கருத்து கேட்டோம்.
    2.   எதனால் மிக குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெற தவறினார்கள்? என்பதை அறிய 70 – 90 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கேட்டோம்
    3. எந்த காரணத்தால் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தகுதி பெற்றீர்கள் என்று 90 – 95 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கேட்டோம்
    4.   மிக முக்கியமாக 110 – 125 மதிப்பெண் பெற்றவர்களிடம் எவ்வாறு திட்டமிட்டு கடினமாக உழைத்தீர்கள் என கேட்டறிந்தோம்.

    இவர்களின் கருத்துகளையே நாம் பிரதிபலிக்கிறோம்.

    திட்டம் 1:
    1.   மிக அலட்சியமாக படிக்க கூடாது.

    2. தற்போது நாம் படிப்பது தான் இத்தனை வருடங்களாக நாம் படித்ததின் இறுதி அத்தியாயம் என்பதை உணருங்கள்.

    3.  குறிப்பாக இனி ஒரு வாய்ப்பு கிடையாது. அப்படியே கிடைத்தாலும் நான் அதை பயன்படுத்த முயற்சிக்க மாட்டேன். இதுவே எனது இறுதி முயற்சி. என முடிவு செய்து இதில் நான் அதிக மதிப்பெண் பெற்று என்னுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சமூகம், அரசு அனைத்திற்கும் எனது உண்மையான திறமையை உணர வைப்பேன் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

    திட்டம் 2
    1.   தாள் 1 ல் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு படிக்க வேண்டும்

    1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 100 சதவீதம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.

    11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் படிக்க வேண்டும்.

    ஆசிரியர் பயிற்சியின் போது படித்த உளவியல், கற்பிக்கும் முறைகள் மற்றும் உள்ள இதர புத்தகங்களை 70 சதவீதம் ஆழந்து படிக்க வேண்டும்.

    இதே தலைப்பில் உள்ள பி.எட் மற்றும் எம்.எட் புத்தகங்களை 20 சதவீதம் மட்டுமே உழைத்து ஆரம்ப நிலையில் ஒருமுறையும் தேர்வுக்கு முந்தைய வாரத்தில் ஒருமுறையும் படிக்க வேண்டும்.

    2.   தாள் 2 ல் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு படிக்க வேண்டும்

    4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 100 சதவீதம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.

    11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்களையும்  படிக்க வேண்டும்.

    ஆசிரியர் பயிற்சியின் போது படித்த உளவியல், கற்பிக்கும் முறைகள் மற்றும் உள்ள இதர புத்தகங்களை 70 சதவீதம் ஆழந்து படிக்க வேண்டும்.

    இதே தலைப்பில் உள்ள பி.எட் மற்றும் எம்.எட் புத்தகங்களை 60 சதவீதம் மட்டுமே உழைத்து ஆரம்ப நிலையில் ஒருமுறையும், நடுவில் ஒருமுறையும், தேர்வுக்கு முந்தைய வாரத்தில் ஒருமுறையும் படிக்க வேண்டும்.

    இவ்வாறு நீங்கள் படிக்கும்போது ஒவ்வொரு வகுப்பில் உள்ள ஒவ்வொரு பாடத்தையும் தனித்தனியாக படிக்காமால் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால் அதே தலைப்பு தொடர்பாக மற்ற வகுப்புகளில் உள்ள பாடங்களையும் படித்து முடித்து விட வேண்டும்.

    ஏனெனில் நமது பாடப்பகுதிகள் பெரும்பாலும் ”மரம் கிளை வகை” மற்றும் ”மை சிந்தும் முறை” பாடதிட்டத்தை கொண்டிருப்பவை.

        உதாரணமாக 6 ஆம் வகுப்பில் இந்திய நிலங்கள் குறித்து படித்தால் 7 ஆம் வகுப்பில் மண் வகைகள் பற்றியும், அடுத்த வகுப்பில் மண்ணில் உள்ள கனிம வகைகளை பற்றியும் விரிவாக தரப்பட்டு இருக்கும். – இது நம் பாடப்பகுதிகள் எவ்வாறு தரப்பட்டிருக்கிறது என ஒரு உதரணத்துக்காக மட்டுமே நாம் கூறியுள்ளோம்.

    எனவே ஒரு தலைப்பு பற்றி படிக்கும் போது இதர வகுப்புகளில் அதே தலைப்பில் உள்ள பாடங்களை படிக்கும்போது நமக்கு அது குறித்து விரிவான, முழுமையான அறிவு ஏற்படும்.
    பாடப்பகுதிகளை படித்த பிறகு அவற்றில் உள்ள முக்கிய கருத்துகளை நீங்களே 1 மதிப்பெண் வினாவாக மாற்றி வினா மற்றும் விடைகளை ஒரு குறிப்பேட்டில் எழுதி வரவும். இக்குறிப்புகள் அடுத்த முறை நீங்கள் மீள்பயிற்சி செய்ய உதவும்.
    மாவட்ட ஆட்சியர் தேர்வுக்கு தயாராகும் போது அதற்கான பாடதிட்டம் மட்டுமே தரப்பட்டு இருக்கும். அவை குறித்து பல்வேறு புத்தகங்களை நாம் தான் தேடி படிக்க வேண்டி இருக்கும். ஆனால் நமது ஆசிரியர் தகுதி தேர்வை பொறுத்தவரை 1 முதல் 12 ஆம் வரையுள்ள பாடபுத்தகங்களில் இருந்தே 80 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகிறது. எனவே அவற்றை ஆழ்ந்து படித்தாலே போதுமானது.

    ஒவ்வொரு பாடப்பகுதியையும் படித்தமுடித்த பிறகு நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். மற்றவரை கேள்வி கேட்க செய்து அதற்கு பதிலளிக்க முற்படுங்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் எந்த வகையில் நீங்கள் பாடப்பகுதியை ஆழந்து படிக்க வேண்டும் என்ற அறிவையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.

    ஒரு பாடப்பகுதியை முழுமையாக பயின்ற பிறகு தான் அது குறித்த மீள்பயிற்சிக்காக மட்டுமே நீங்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்காக இணையத்திலும், புத்தக வடிவிலும் உள்ள பல்வேறு பயிற்சி புத்தகங்களை நாட வேண்டும். முழுமையாக பயிற்சி புத்தகங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம்.

    இறுதியாக எவ்வாறு படிப்பது என ஒரு மாதிரி நேர வழிகாட்டியை (Model Schedule) அமைத்துக்கொள்வோம்.

    ஏப்ரல்  மாதத்தில் அடுத்த தகுதி தேர்வு நடக்க இருக்கிறது .

    அப்படியெனில் மார்ச்சு  முதல் தேதி  முதல் ஏப்ரல் மாதம் வரை இடையில் 60 நாட்களே மட்டுமே உள்ளன. தாள் 2 க்கு தயார் ஆவதெனில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள 15 பாட புத்தகங்களையும் நீங்கள் முதல் 35 நாட்களில் படித்து முடிக்க வேண்டும். அடுத்த 10 நாட்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாட புத்தகங்கள் மற்றும் DTEd, BEd, MEd பாட புத்தகங்களை படிக்க வேண்டும். இறுதியாக உள்ள 15 நாட்களில் அனைத்து புத்தகங்களையும் மறுமுறை படிக்கும் போது நீங்கள் எடுத்த குறிப்புகளை மீள் பார்வை செய்யவும், பயிற்சி புத்தகங்கள் மற்றும் Study Materials இல் உள்ள முக்கிய வினாக்களையும் மீள் பார்வை செய்ய பயன்படுத்தி கொள்ள வ

    No comments: