Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 1, 2017

    மேல்நிலை பொதுத் தேர்வு; மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்!

    பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை (மார்ச் 2) துவங்க உள்ள நிலையில், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசு தேர்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6737 மேல்நிலைப் பள்ளிகளிருந்து மொத்தம் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுத உள்ளனர். 


    மாணவியர் 4 லட்சத்து 80 ஆயிரத்து 837 பேர் , மாணவர்கள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 994 பேர் மற்றும் ஒரு தேர்வர் திருநங்கை, மாணவர்களை விட 62 ஆயிரத்து 843 மாணவிகள் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். 

    பள்ளி மாணவ - மாணவியர்களில் அறிவியல் பாடத்தொகுதியின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 மாணவ - மாணவியர்களில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 162 மாணவர்கள் மற்றும் ஒரு திருநங்கை ஆவார். 

    வணிகவியல் பாடத்தொகுதியின் கீழ் மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 மாணவ - மாணவியர்களில், மாணவிகள் 1 லட்சத்து 23 ஆயிரம் 370 மற்றும் மாணவர்கள் 1 லட்சத்து 607 பேர் ஆவர். பள்ளி மாணவர்களைத் தவிர 34 ஆயிரத்து 868 தனித்தேர்வர்களும் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். 

    சென்னை மாநகரில் 407 பள்ளிகளிலிருந்து 53 ஆயிரத்து 573 மாணவர்கள் 145 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர். இவர்களில் 28 ஆயிரத்து 721 மாணவிகள் மற்றும் 24 ஆயிரத்து 852 மாணவர்கள் உள்ளடங்குவர். 

    புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 33 தேர்வு மையங்களில், 143 பள்ளிகளை சார்ந்த 15 ஆயிரத்து 660 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு மொத்தம் 2434 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    சிறைவாசிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, மேல்நிலைப் பொதுத் தேர்வினை 98 சிறைவாசிகள் பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுத உள்ளனர். 

    மேல்நிலைப் பொதுத் தேர்வினை தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று மேல்நிலைத் தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 ஆகும். 

    மாற்றுத்திறனாளி தேர்வர்கள்

    மேல்நிலைப் பொதுத் தேர்வில் டிஸ்லெக்சியா பாதிக்கப்பட்ட மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர்/வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப் பாடவிலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம்) ஒதுக்கிடவும் அரசுத் தேர்வுத் துறையால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு ( ஹால் டிக்கெட்) 

    அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது. இவ்வாண்டு முதன்முறையாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. 

    இதன் காரணமாக வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களில் வழக்கமாக அச்சிடப்படும் அறிவுரைகளை தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளின் மூலமாகவே படித்து அறிந்து கொள்ளலாம். 

    தேர்வு எழுதுபொருட்கள் 

    அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாள்கள், கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் முகப்புச் சீட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. தேர்வின் போது தேர்வர்களது புகைப்படம், பதிவென், பாடம் முதலான விவரங்கள் அச்சிடப்பட்ட முகப்புச் சீட்டுகள் முதன்மை விடைத்தாளுடன் இணைத்து தைக்கப்பட்டே தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. தேர்வர் முகப்புச் சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கையொப்பமிட்டால் மட்டுமே போதுமானது. 

    வழித்தடங்கள்

    அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 577 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வழித்தட அலுவலர்கள் மூலமாக வினாத்தாள் கட்டுக்கள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்களுக்குக் கொண்டு சென்று ஒப்படைக்கப்படவும் தேர்வு முடிவுற்றவுடன் அனைத்துத் தேர்வு மையங்களிலிருந்தும் விடைத்தாள் கட்டுக்களை பாதுகாப்பான முறையில் விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளது. 

    பாதுகாப்பு ஏற்பாடுகள் 

    இத்தேர்விற்காக 301 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவ்விடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    மேலும் தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் ஆகிய இடங்களில் போதிய காவல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டி காவல் துறைத் தலைவருக்கும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. 

    தேர்வுக் கால கண்காணிப்பு ஏற்பாடுகள்

    அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைச் சார்ந்த இயக்குநர்கள்,இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் ஆகியோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வு முன்பனிகளையும், தேர்வுக்கால பணிகளையும் மேற்பார்வையிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    அதுமட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக தோராயமாக சுமார் 4,000 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

    அலைபேசி தடை 

    இவ்வாண்டு தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல

    No comments: