அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான (2017-18) பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை தயாரித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
* பொது இடமாறுதலுக்கான விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சமர்ப்பித்தல் - மார்ச் 31
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்இடமாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 21
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்பதவி உயர்வு - மே 22
* அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்மாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 23
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 24
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே25
* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு - மே 26
* உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள்மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 27
* உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள்மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 28
* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 29
* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 30
* இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பா சிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - மே 31
உத்தேச காலஅட்டவணையின் படி, இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பான பணிகளை மே 31-ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது
No comments:
Post a Comment