அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உட்பட்ட, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.
அங்கு பேசும்போது, ’அரசு பள்ளிகளில், யோகா வகுப்பு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில், ஆணை பிறப்பிக்கப்படும்’ என்றார்.
அதன்படி, பள்ளி மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்த, அரசு சார்பில், அவர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகித்தார்.
No comments:
Post a Comment