’நீட் தேர்விலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வைக்கப்பட்ட கோரிக்கையை, கனிவுடன் பரிசீலிப்பதாக, மத்திய அரசிட மிருந்து உறுதி கிடைத்துள்ளது’ என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை, பிளஸ் 2 தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே இருந்து வந்த நிலையில், ’நீட்’ எனப்படும், தேசிய தகுதி நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அறிவித்தது.
இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் விதமாக, மசோதாவை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய, மாநில அரசுகள் முரண்பட்டு நிற்கும் நிலையில், பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வரும் வேளையில், இந்த ஆண்டு, நீட் தேர்வு உண்டா; இல்லையா என்ற கேள்வி, மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த விஷயத்தில், விரைந்து நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர், நேற்று டில்லியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர், சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின், நிருபர்களிடம், தமிழக அமைச்சர்கள் கூறியதாவது:
மருத்துவப் படிப்பில், தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி, ஏற்கனவே கோரிக்கை இருந்து வருகிறது. முதல்வர் டில்லி வந்திருந்த போதும், இதை வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர்களிடம், தற்போது, நீட் தேர்வு விலக்கு குறித்து, நேரில் வலியுறுத்தி னோம். ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களும், உயர்கல்வியில் பயன் பெற வேண்டும்.
சேர்க்கைக் கான நேரம் நெருங்குவதால், விரைந்து முடிவெடுக்க வேண்டும். இந்த விலக்கை, அரசு மருத்துவக் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள், கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படும் அரசு இடங்கள் ஆகியவற்றுக்கு தான் கேட்கிறோம் என்பதையும்தெளிவு படுத்தினோம்.
இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக, அமைச்சர்கள் உறுதியளித்து உள்ளனர். தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை விரை வில் அமையும் என்றும், மத்திய சுகாதாரதுறை அமைச்சர் வாக்குறுதி அளித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜெயலலிதா மரணம் குறித்து எழுந்துள்ள தற்போதைய சர்ச்சைகளுக்கு, பன்னீர்செல்வத் தின் மனசாட்சி தான் பதிலளிக்க வேண்டும்; அவர் கூற்றுப்படி, குற்றம் நடந்துள்ளது என் றால்,முதல் குற்றவாளி அவர் தான்.
விசாரணை கமிஷன் அமைக்கப்படுமானால், முதல் ஆளாக விசாரிக்கப்பட வேண்டியவர் பன்னீர் செல்வம் தான்.-விஜயபாஸ்கர், தமிழக சுகாதார துறை அமைச்சர்.
No comments:
Post a Comment