Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 7, 2017

    பி.எஃப். ஓய்வூதியர்கள் உயிர் சான்றிதழ் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) திட்ட ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 31 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை முகப்பேர் பி.எஃப். மண்டல ஆணையர் வி.எஸ்.எஸ்.கேசவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் ஓய்வூதியதாரர்கள் தங்களது உயிர் வாழ்நாள் சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, வரும் 31 -ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, அம்பத்தூர் மண்டலத்தின்கீழ் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள், ஆதார் சார்ந்த உயிர்வாழ் சான்றிதழை கால நீட்டிப்பு செய்யப்பட்ட தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு 

    கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காகித வடிவில் சமர்ப்பிக்கப்பட்ட உயிர்வாழ் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    இதுகுறித்த கூடுதல் விவரங்களை ’மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர், ஆர்- 40ஏ1, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலக வளாகம், முகப்பேர், சென்னை-37'என்ற முகவரியிலும், 044 -2635 0080, 2635 0110, 2635 0120 என்ற தொலைபேசி எண்களிலும் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: