தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று (மார்ச் 02) துவங்கியது. மொத்தம் 2427 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளன. பிளஸ் 2 தேர்வுகள் இன்று துவங்கி, மார்ச் 31ம் தேதி வரை தேர்வுகள் நடக்கும். மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 606 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
காலை 10 மணிக்கு துவங்கி 1 மணி வரை தேர்வுகள் நடக்கும். தேர்வுகளில் முறைகேடு நடைபெறாமல் இருக்க 4000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளும் தேர்வுப்பணியை பார்வையிட உள்ளனர்.
காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு ஈடுபட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை குறித்தும் எச்சரிக்கை நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment