இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இன்று (மார்ச் 14) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி செயலர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு நிகரான சம்பள உயர்வு வழங்குவது உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஊராட்சி செயலர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை, இதில் பங்கேற்கின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'வேலைநிறுத்தத்தால் ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள், சீமை கருவேல மரங்கள் அகற்றம், குடிநீர் வினியோகம், தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டுதல், வாக்காளர் தயாரிப்பு பணிகள் பாதிக்கும்'
என்றனர்.
No comments:
Post a Comment