இது குறித்து தேர்வுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகிறது. இந்த தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 11827 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ மாணவியர் எழுத உள்ளனர்.
இதையடுத்து அந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான விடைத்தாள்கள் 3298 தேர்வு மையங்கள் உள்ள மாவட் டங்களுக்கு தேர்வுத் துறை கடந்த வாரம் அனுப்பி வைத்துள்ளது. இதையடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் விடைத்தாள்கள் தைக்கும் பணி தொடங்கியுள்ளது. விடைத்தாளின் முதன்மை விடைத்தாளில் தற்போது முகப்பு தாள் இணைக்கும் பணியை தொடங்க தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாளில் முகப்புத்தாள்கள் முதன்மை விடைத்தாளுடன் தைக்கும் பணியை 7ம் தேதி முதல் மேற்கொள்ள வேண்டும். முகப்பு தாள்களை முதன்மைத் தாளுடன் இணை த்து தைக்கும் போது அந்தந்த பாடத்துக்குரிய முதன்மை விடைத்தாளுடன் தைக்க வேண்டும். இதன்படி பத்தாம் வகுப்பு மொழித்தாள் என்று உள்ளவற்றில் மொழித்தாள் 1, ஆங்கிலம் 1, ஆங்கிலம் 2 ஆகிய முகப்புத்தாள்களை தைக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ் 2க்கு அதற்குரிய தமிழ் 2 முகப்பு தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற மொழிப்பாடங்களான இந்தி, பிரெஞ்சு, சமஸ்கிருதம், தெலுங்கு போன்றவற்றின் இரண்டாம் தாள் பாடத்துக்கு வரிசை எண் 1ல் காணும் பத்தாம் வகுப்பு மொழிப்பாட விடைத்தாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பத்தாம் வகுப்பு கணக்கு, அறிவியல் பாடங்களில் கணக்கு பாடத்துக்கு கிராப் ஷீட்டை 28 மற்றும் 29ம் பக்கங்களுக்கு இடையே இணைத்து தைக்க வேண்டும்.
* முகப்புத் தாளில் மீடியம்(பாட வழி) தவறாக இருந்தால் சிவப்பு நிற மையால் திருத்தம் செய்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
* முகப்பு தாளில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, பாலினம் தவறாக இருந்தாலோ, பள்ளியின் பெயர் திருத்தம் இருந்தால் அவற்றை சிவப்பு மையால் திருத்தம் செய்து மேற்கண்ட படி ஒப்புதல் பெற வேண்டும்.
* தேர்வு மைய எண் மற்றும் பெயரில் திருத்தம் இருந்தாலோ, முகப்புத்தாளில் பார்கோடு உள்பட சேதம் அடைந்திருந்தாலோ, முகப்பு தாள் பெறப்படவில்லை என்றாலோ, பாடக் குறியீட்டு எண் மற்றும் பாடம் மாறி இருந்தால் தேர்வுத் துறை அறிவித்துள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொள்ள வேண்டும்.uமாணவரின் போட்டோ முகப்பு தாளில் மாறியிருந்தால் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், உரிய பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவரின் போட்டோவை ஒட்டி சான்றொப்பம் செய்ய வேண்டும், தனித் தேர்வராக இருந்தால் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரே மாணவரின் போட்டோவை ஒட்டி சான்றொப்பம் இட வேண்டும்.
No comments:
Post a Comment