Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, January 12, 2015

    நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய புதிய வசதி.

    நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறியும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி "இண்டேன்',"பாரத்' ஆகிய எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்கள் தாங்கள்,எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு செய்துள்ள கைப்பேசி எண்ணிலிருந்து, தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு ஏற்ற குறியீடுகளை "டைப்' செய்து 77382 99899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.
    உடனடியாக தங்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

             தமிழகத்தில் நேரடி மானியத் திட்ட முறை கடந்த 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் வரும் மாதம் வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள் அல்லது இணைய விரும்பி விண்ணப்பங்களை அளித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து இணையதளத்தின் மூலமோ அல்லது எரிவாயு முகவரின் அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அறிய முடிந்தது.

    இந்த நிலையில், கைப்பேசி மூலம் நேரடி மானியத் திட்ட விவரங்களை அறிந்து கொள்ளும் புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன் விவரம்:



    தெரிந்து கொள்ள வேண்டிய விவரம்            இண்டேன்    பாரத்கேஸ்

    எரிவாயு இணைப்பு அடையாள எண்ணை

    (17 இலக்க குறியீட்டு எண்) தெரிந்துகொள்ள    INDANE LPGID    LPGID

    நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளோமா

    என்பதை அறிய                                                INDANE DBTLSTATUS    DBTLSTATUS

    மானிய விலையில் எரிவாயு உருளை

    எண்ணிக்கை அறிய                                           INDANE LPGQUOTA      LPGQUOTA

    நேரடி மானியத் திட்ட முன்வைப்பு,

    மானியத்தொகை விவரங்களை அறிய                INDANE SUBSIDY    LPGSUBSIDY

    No comments: