தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு, மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சி நடந்தது.
பொன்னேரி கிளை நுாலகம் சார்பில், 47வது தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு, சிந்தனை முற்றம், பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துதல், புரவலர் பட்டயம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள், நுாலகர் சம்பத் தலைமையில் நடந்தன.
பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல் தொடர்பாக, ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் குளோரி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை முனைவர் ரதிகுமாரி, தமிழாலயா தாமோதரன், மீஞ்சூர் சுகாதார ஆய்வாளர் காசிநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
No comments:
Post a Comment