விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்துார் சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குமாரசாமி, 55. ஆசிரியர்கள் உதயசூரியன், 49. மணிவண்ணன், 45. இவர்கள் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி 2014 நவம்பர் 25 தேதி அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதை தொடர்ந்து மூன்று ஆசிரியர்களும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் மீதான பாலியல் புகார் குறித்து மக்கள் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு புகார் அனுப்பினர். இந்நிலையில் மூன்று ஆசிரியர்களும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில்,“சின்னகாமன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இரு ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக புகார் வந்தது. புகார் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தகவல் அனுப்பினோம். அதன்படி மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
No comments:
Post a Comment