புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவங்க, விதிகள் அடங்கிய கையேட்டை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம்(ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.
மேலும், அனுமதி பெறாமல், கல்வி நிறுவனங்கள் இயங்கக்கூடாது என, வலியுறுத்தி உள்ளது. புதிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குதல், கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., இடையே, பனிப்போர் நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு, இப்பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு வர, மேற்கூறிய பொறுப்புகளை, ஏ.ஐ.சி.டி.இ., கண்காணிக்க உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவு அடிப்படையில், இந்த ஆண்டில், புதிய கல்வி நிறுவனங்கள் துவக்கவும், ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனங்களில், இடமாற்றம், கூடுதல் படிப்புகள் துவக்குவது போன்றவற்றில், கல்வி நிறுவனங்கள் நடந்துகொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்த அறிவிப்பை, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ளது.
மேலும், புதிய கல்வி நிறுவனங்கள் துவக்க, பின்பற்ற வேண்டிய விதிகள் அடங்கிய கையேடு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், கல்வி நிறுவனங்கள் துவக்க தேவையான இட வசதி, கட்டண விகிதம், ஆசிரியர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதிகள், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்களில், பின்பற்ற வேண்டியவை குறித்து கூறப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அதில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல், எந்த தொழில்நுட்பமும், மேலாண்மை, பொறியியல் கல்வி நிறுவனமும் இயங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி உள்ளது.
ஒரு லட்சம் சீட் காலி!
ஆண்டுதோறும், புதிய கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பது போல், கல்லூரிகளை மூடவும் அனுமதி கேட்கப்படுவதாக, தொழில்நுட்பக் கல்வி இயக்கக தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம், ஆண்டுக்கு 1 லட்சம் பொறியியல் இடங்களும், ஆயிரக்கணக்கான பாலிடெக்னிக் இடங்களும் காலியாக உள்ளன.
தமிழக தொழில்நுட்ப கல்லூரிகள் வகை எண்ணிக்கை
அரசு - 61
அரசு உதவி - 70
பல்கலை கீழ் - 15
தனியார் - 1,593
குறையும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள்
ஏ.ஐ.சி.டி.இ.,யின் கையேட்டில் உள்ள தகவல்படி, பாலிடெக்னிக் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேநேரம், மேலாண்மை கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
வகை - 2013 - 2014
பாலிடெக்னிக்
அரசு - 40 - 41
அரசு உதவி - 34 - 34
தனியார் - 412 - 417
முதுநிலை மேலாண்மை பட்டயம்
அனைத்து வகை - 20 - 19
எம்.பி.ஏ., கல்லூரிகள்
அனைத்து வகை - 395 - 372
No comments:
Post a Comment