கடந்த ஜூன் மாதம் நடந்த கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம் வங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குரூப்–2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும். குரூப்–1 முதல் நிலை தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். மேலும் குரூப்–1 தேர்வு மூலம் 50 இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த ஆண்டு நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment