Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Tuesday, January 27, 2015

  ஆரோக்கியமாக வாழ கால நேர கட்டுப்பாடு

  சென்னை ஆதம்பாக்கம் மதி அக்குபஞ்சர் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் கோமதி குணசேகரன் கூறியதாவது:- உடல் உறுப்புக்களுக்கு குறிப்பிட்ட 2 மணி நேரத்துக்கு பிராண சக்தி அதிகம் இருப்பதால் செயல் திறன் உச்சம் அடைகிறது என சீன மருத்துவம் கூறுகிறது.

  நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
  விடியற்காலை 3 மணி முதல் 5 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
  விடியற்காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீரவேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
  காலை 7 மணிமுதல் 9 மணிவரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும். காலை 9 மணி முதல் 11 மணி வரை மண்ணீரலின் நேரம் காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச்சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது.
  இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரிழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது. முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இதயத்தின் நேரம் இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாக கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது.
  இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். பிற்பகல் 1 மணிமுதல் 3 மணிவரை சிறுகுடலின் நேரம். இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஒய்வெடுப்பது நல்லது. பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை சிறுநீர்ப்பையின் நேரம் நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
  மாலை 5 மணிமுதல் 7 மணிவரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம். இரவு 7 மணிமுதல் 9 மணிவரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் ஷாக் அப்சர்பர்) இரவு உணவுக்கு உகந்த நேரம் இது இரவு 9 மணி முதல் 11 மணிவரை.
  டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது. இரவு 11 மணி முதல் 1 மணிவரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
  இரவு 1 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை கல்லீரலின் நேரம் இந்தநேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.
  இந்த நேரக் கொள்கையை பின்பற்றினால் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.

  No comments: