அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத்தேர்வு நடத்தி தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.1,028 ஆசிரியர்கள் நியமனம்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் என மொத்தம் 1,028 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்த ஆசிரியர்களை நியமிக்கும் பணியை தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்படைத்தது. பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி ஆசிரியர்தேர்வு வாரிய தலைவர் விபுநய்யர் தலைமையில் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி, உறுப்பினர் க.அறிவொளி ஆகியோர் எழுத்துத்தேர்வு நடத்த உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
எழுத்துத்தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்கள் ஆகும். தேர்வு 95 மதிப்பெண்ணுக்கு 3 மணிநேரம் நடைபெறும். ஆப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். 190 கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் சரியாக பதில் அளித்தால் ½ மதிப்பெண் உண்டு. மீதம் உள்ள 5 மதிப்பெண்ணுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். இதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
சிறப்பாசிரியர்கள் நியமனத் தேர்வுக்கான பாடத்திட்டத்தினை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்.
1 comment:
sir ithu thodarbaaga oru case nadanthu varukirathu nadathupavar p.Ramar 9894700773 pls contact and give informations pls sir
Post a Comment