Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, January 3, 2015

    பிளஸ் 2 மாணவர்களுக்கான வெற்றி உங்கள் கையில் நிகழ்ச்சியில், புதுகோட்டை மாவட்டத்தினை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்

    புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் பிளஸ்டூ வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான வெற்றி உங்கள் கையில் நிகழ்ச்சி நேற்று 03-01-2015(சனிக்கிழமை) காலை முதல் மாலை வரை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு.கணேஷ் இ.ஆ.ப அவர்கள்
    கலந்துகொண்டு முன்னிலை வகித்து பேசும்போது கூறியதாவது, இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இக்கல்வியாண்டில் புதுக்கோட்டை மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறவேண்டும். நாங்கள் படித்த காலங்களில் எல்லாம் பிளஸ்டூ அரசு பொதுத்தேர்விற்கு ஒரு தேர்விற்கும்,மற்றொரு தேர்விற்கும் போதிய இடைவெளி இருக்காது. ஆனால் தற்போது உங்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அரசு பொதுத்தேர்வில் ஒரு தேர்விற்கும் மற்றொரு தேர்விற்கும் போதிய இடைவெளியினை அரசு அறிவித்து உங்களின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் அரசு உங்களுக்காக 14 வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த அரிய வாய்ப்பினை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையும், இந்த சுதர்சன் கல்வி நிறுவனமும், இணைந்து வழங்கிய சிறப்பு கையேடுகளை நன்றாக படித்து, படிப்பதோடு மட்டுமில்லாமல் நன்றாக எழுதிப்பார்த்து அரசு பொதுத்தேர்வினை நன்றாக எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த மேற்படிப்புகளை தேர்வு செய்து உங்களின் எதிர்கால வாழ்க்கையினை நன்றாக அமைத்துக்கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிக்கு சுதர்சன் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு வி.கே.சுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு தலைமை வகித்து பேசும்போது கூறியதாவது, பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் மேற்படிப்பை தேர்ந்தெடுத்து படிக்காமல் உங்களது விருப்பத்தின்படி எதிர்கால மேற்படிப்பினை நீங்கள் தேர்வு செய்யவேண்டும். இக்கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்டூ அரசு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 95 சதவீத தேர்ச்சி சதவீத இலக்கினை அடையும் ஆசிரியர்களுக்கு சுதர்சன் கல்வி நிறுவனத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தி கௌரவிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் அமர்வு நீதிபதி திருமதி சி. கார்த்திகா அவர்கள் கலந்துகொண்டு பிளஸ்டூ வகுப்பு முடிக்கும் மாணவர்கள் அதற்கு பிறகு என்னென்ன மேற்படிப்புகள் படித்து அதன் மூலமாக அவர்களின் வாழ்க்கையினை வளப்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்தும், மாணவர்களாகிய நீங்கள் பெறும் வெற்றி தன்னம்பிக்கை, திட்டமிடுதல், கடின உழைப்பு, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை, ஆகிய 5 கொள்கைகள் மூலமாக அடையலாம் என்பதைக்கூறி வெற்றி உங்களது கையிலேயே உள்ளது என்று பேசினார். அதனைத்தொடர்ந்து திருச்சி கனரா வங்கியின் மண்டலப்பொது மேலாளர் திரு ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு பிளஸ்டூ வகுப்பு முடித்து மேற்படிப்புகள் மூலமாக வங்கியில் பெறும் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகன் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினர்களை கௌரவப்படுத்தி எங்கு என்ன படிக்கிறோம் என்பதை விட எப்படி படிக்கிறோம் என்பதை பிளஸ்டூ வகுப்பு படிக்கும் மாணவர்கள் கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு நன்றாக படித்து அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று புதுக்கோட்டை மாவட்டம் தேர்ச்சி விழுக்காட்டில் முதன்மை இடத்தினை பெறவேண்டுகிறேன். மேலும் நீங்கள் பெறும் வெற்றி உங்களது கையில்தான் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பிளஸ்டூ மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது குறித்து இயற்பியல் பாடத்திற்கு பாட வல்லுனர்களான முதுகலை பாட ஆசிரியர்கள் திரு வி.குமார், திரு ஜி.மாரிமுத்து, திரு ஏ.எல். முத்துக்குமார், திரு எம்.குழந்தைவேல், ஆகியோரும், கணக்கு பாடத்திற்கு பாட வல்லுனர்களான முதுகலை பாட ஆசிரியர்கள் திரு கே. கருப்பையா, திருமதி ஆர்.தமிழரசி, திரு கே.பாண்டியன், திருமதி பி.ஜெயலலிதா, ஆகியோரும் மாணவர்களுக்கு வழிகாட்டினார்கள். இதேபோல வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது பற்றி பாட வல்லுனர்களான முதுகலை பாட ஆசிரியர்கள் திரு என்.முத்துராமன், திரு சி.பழனிவேலு, திருமதி எஸ்.சுசரிதா, திரு எஸ்.இளவரசு ஆகியோரும், உயிரியலில் தாவரவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது பற்றி பாடவல்லுனர்களான முதுகலை பாட ஆசிரியர்கள் திருமதி ஏ.நாகம்மை, திரு என். திருமேனிநாதன் ஆகியோரும், உயிரியலில் விலங்கியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது பற்றி பாட வல்லுனர்களான முதுகலை பாட ஆசிரியர்கள் திரு எஸ்.மோகன், திரு ஏ.ஜீவானந்தம், ஆகியோரும் மாணவர்களுக்கு வழிகாட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் சுதர்சன் பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு அஜய் கே.சுந்தரம், திரு விஜய் கே.சுந்தரம்,முதல்வர் முனைவர் கே.கணேசன், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் முனைவர் எம்.இராதகிருஷ்ணன், இயக்குநர் முனைவர் எஸ்.பழனி, அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் (பொறுப்பு) திரு ஆர். சண்முகம், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு சின்னப்பன். திரு சூசை, திரு திராவிடச்செல்வம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு போஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்டூ வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதே போல வெற்றி உங்கள் கையில் நிகழ்ச்சி வருகிற 11ந்தேதியும் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. 

    No comments: