கடந்த மே மாதம் நிதித்துறை செயலகத்தின் அலுவலர்களை சந்தித்தோம். அப்போது நமது ஊதிய வழக்கிற்கு அரசு சார்பில் பதில் மனு விரைவில் தாக்கல் செய்திட வலியுறுத்தினோம் .அதற்கு பட்ஜெட் கூட்ட தொடர் முடிந்தால் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும் என்றனர். மேலும் ஊதியம் சார்பான எந்த ஒரு வழக்கும் நிதி துறை அனுமதி இல்லாமல் முடிக்க முடியாது என்றனர், அதனால் நமக்கு கிடைக்க வேண்டிய தீர்ப்பு ஆசிரியர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாத நிலையில் தள்ளிப்போகும் நிலை உள்ளது. மேலும் வழக்கு குறித்த காலத்தில் முடியாததால் கூடுதல் நிதி செலவாகுகிறது. அதற்கும் ஆசிரியர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாதநிலையில் தள்ளிப்போகும் நிலை உள்ளது.
அரசின் நிலை பதில் மனு தாக்கலில் எப்படி இருக்கும் ?
அ.ஆ.நிலை எண்: 1383/கல்வி/நாள்:23.8.1988ன் படி இடை நிலை ஆசிரியர்களின் கல்வி தகுதி SSLC யுடன் சான்றிதழ் படிப்பு தான் .அதன் படி தான் ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது அதனால் நிதி துறை அறிக்கை சரியே என தாக்கல் செய்யப்பட உள்ளது என்றனர் .அதற்கு நாம் 1989 ஆண்டு முதல் +2 உடன் D.T.Ed. (டிப்ளமா) வழங்கப்படுகிறதே என்றோம். அதற்கு GO இருந்தால் கொண்டு வாருங்கள் என்றனர் .
நாம் TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) SCERT (ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம்) ஆகியோரிடம் தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் பல ஆதாரங்கள் கேட்டோம் அவர்களும் GO இல்லை என்று பதில் கூறிவி ட்டனர்
நமது வழக்கறிஞர் ஊதிய வழக்கிற்காய் கேட்ட சில ஆதாரங்கள்
1) .1986 ஊதிய குழுவில் என்ன காரணத்திரற்காய் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது ??
2 ) 1996 ஊதிய குழுவில் என்ன காரணத்திரற்காய் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது ??
3 ) 1986 மற்றும் 1996 ஊதிய குழுவில் தற்போது டிப்ளமாகல்வி தகுதியை காரணம் காட்டி தர ஊதியம் 2800 ல் இருந்து 9300 க்கு உயர்த்த பட்ட 42 வகை பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் எவ்வளவு ?
4 ) முடிந்தால் இடை நிலை ஆசிரியர்களின் கல்வி தகுதி டிப்ளமா என்பதற்கான GO
5) நமது கல்வி தகுதி 2010ம் ஆண்டு கல்வி உரிமை சட்டப்படி தான் டிப்ளமா + தகுதி தேர்வு என மாற்றம் செய்து அரசு ஆணை வந்து உள்ளது. ஆனால் அதை வைத்து 2006ம் ஆண்டின் ஊதியக்குழுவுக்கு ஊதியம் நிர்ணயம் செய்திட கோரிக்கை முடியாது. அதனால் நாம் அனைவரும் +2 உடன் D.T.Ed. (டிப்ளமா சான்று வைத்து இருந்தாலும் G.O பெற தனி வழக்குதான் போட வேண்டும் அல்லது போராட வேண்டும் .தற்போதைய நிலையில் போராடி வெல்வது கடினம். எனவே ஆசிரியர்களின் போதிய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
TATA KIPSON
3 comments:
Sir neenga win panna pogirathu illa
Secondary grade scale 2800 than. Neenga poradi waste. Veena amount ilakka vaendam
judgement copy mattum thaan vanganum nu sonninga ippa... muthalil sariyana vazhiyai kandupidyungal piragu pinpatrungal
govt sec grade teachers sa certificate verification ku vara solli kuduthirukara call letter la irukuthu sir andha aadharam pothum nu nenaikaren and dted program 12th mudichathan undunnu go iruntha adha traceover pannalam sir nichaiyam verti kidaikum namaku
Post a Comment