ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வுக்கு தத்கல் திட்டத்தின் கீழ் வரும் 9, 10ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
அறிவிப்பு விவரம்
வரும், 26ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை ஆசிரியர் பட்டயப் பயிற்சி, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுகள் நடக்கின்றன. இதற்கு, ஏற்கனவே நிர்ணயித்த தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் தத்கல் திட்டத்தின் கீழ் வரும் 9, 10ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
இந்த தேதிகளில் www.tndge.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் உரிய தேர்வு கட்டணங்களை அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் வரும் 10ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி, பின் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment