வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடின் அளவை அறிவதற்கு செயற்கைக்கோள் ஒன்றை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்புகிறது.
வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு உச்சத்தை அடைந்துள்ளது. வட துருவத்தின் காற்று மண்டலத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கார்பனின் அடர்வு 400 பி.பி.எம். (பார்ட்ஸ் பெர் மில்லியன்) ஆக இருந்தது. எட்டு லட்சம் ஆண்டுகளில் இது உயர்ந்தபட்ச அடர்த்தியாகும்.
கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் ஓசோன் ஆகியவற்றின் அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்கும்போது புவியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இவை, கிரீன் ஹவுஸ் வாயுக்கள் என்று அறியப்படுகின்றன. தற்போது, உலகம் முழுவதும் புவி வெப்பமயமாவதால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிரீன் ஹவுஸ் வாயு தொடர்பான ஆய்வுக்கு ஆர்பிட்டிங் கார்பன் அப்சர்வேட்டரி-2 (ஓ.சி.சி.-2) என்ற செயற்கைக்கோளை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அடுத்த மாதம் 1ம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது. இது போன்று ஆறு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. இவை அனைத்தும், 99 நிமிடங்களில் பூமியை சுற்றி வந்து, வளிமண்டலத்தில் மட்டுமல்லாது, காடுகள் மற்றும் கடலில் கார்பன் அதிகளவில் பரவியிருக்கும் பகுதிகளை கண்டறிந்து நாசாவுக்குத் தெரிவிக்கும்.
No comments:
Post a Comment