"மாணவர்களின் எதிர்மறை சிந்தனைகளை நீக்கி, நேர்மறை சிந்தனையை வளர்ப்பதே ஆசிரியர்களின் கடமை" என சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசினார்.
திண்டுக்கல் நாடார் உறவின்முறை பொன்விழா ஆண்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நாடார் உறவின்முறை தலைவர் கனகசபை தலைமை வகித்தார். கலெக்டர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.
சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசியதாவது: "பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவதை நிறுத்த வேண்டும். சிலர் தானாக கற்று கொள்கின்றனர். முடியாதவர்கள் கற்பதன் மூலம் தெரிந்து கொள்கின்றனர். மாணவர்களின் எதிர்மறை சிந்தனைகளை நீக்கி, நேர்மறை சிந்தனையை வளர்ப்பதே ஆசிரியர்களின் கடமை. மாணவர்கள், தங்களின் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பலமுறை முயன்றால் எதையும் சாதிக்க முடியும்" என்றார்.
எம்.எஸ்.பி., சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முருகேசன், நாடார் உறவின்முறை செயலாளர் தர்மராஜன், பொருளாளர் சங்கரலிங்கம், இணைசெயலாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டனர்.உ
No comments:
Post a Comment