வரும், 16ம் தேதி, பி.இ., 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கு, மூன்று நாளுக்கு முன், பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.
பிளஸ் 2 நகல் கேட்டு, 80 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, விடைத்தாள் நகல், இணைய தளத்தில் வெளியிடப்பட்டு விட்டது. மறு மதிப்பீடு கேட்கும் மாணவர்கள், நாளை, 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை, 3,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பித்திருப்பதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கிடையே, பி.இ., படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பலர், முக்கிய பாடங்களில், கூடுதல் மதிப்பெண் எதிர்பார்த்து, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தனர். பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையில் விண்ணப்பித்துள்ள, 1.80 லட்சம் பேருக்கு, வரும், 16ம் தேதி, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படுகிறது. மறு மதிப்பீடு முடிவு, 'ரேங்க்' பட்டியல் தயாராவதற்கு முன் வர வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது: வரும், 13ம் தேதி அல்லது 14ம் தேதிக்குள், மறு மதிப்பீட்டு முடிவு அடங்கிய, 'சிடி'யை, அண்ணா பல்கலைக்கு அனுப்பி விடுவோம். 'ரேங்க்' பட்டியலில், புதிய மதிப்பெண்ணை சேர்த்து, 'ரேங்க்' தயாரிக்க, சில மணி நேரம் போதும்.
எந்த பாதிப்பும் வராது:
ஆனால், 2, 3 நாளுக்கு முன்னதாகவே, நாங்கள் முடிவை வழங்கி விடுவோம். அதனால், மாணவர்களுக்கு, எந்த பாதிப்பும் வராது. இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment