2014ம் ஆண்டுக்கான Times Higher Education (THE) Asia University Rankings 2014 பட்டியலில், பஞ்சாப் பல்கலைக்கழகம், 32வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலின்படி, ஜப்பான் தொடர்ந்து தனது நிலையில் ஆதிக்கம் செலுத்துகிறது. சீனாவும், தனது முன்னேற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்தாண்டு, 3 உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே முதல் 100 இடங்களுக்குள் தரநிலைப் பெற்றிருந்தன. ஆனால், இந்தாண்டு, மொத்தம் 10 இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் முதல் 100 என்ற தரப்பாட்டிற்குள் வந்துள்ளன.
பஞ்சாப் பல்கலையை அடுத்து, காரக்பூர் ஐ.ஐ.டி., அப்பட்டியலில் 45வது இடத்தைப் பெற்று, இந்தியளவில், 2ம் இடம் பெற்றுள்ளது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், அப்பட்டியலில் புதிய வரவாக 76வது இடத்தைப் பிடித்துள்ளது.
அலிகார் முஸ்லீம் பல்கலை 80வது இடத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலை 90வது இடத்திலும் வந்துள்ளன.உ
No comments:
Post a Comment