Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 9, 2013

    பிளஸ் 2 தேர்வில் அகமதிப்பீடு முறை: ஆசிரியர் சங்கம் கோரிக்கை

    "பிளஸ் 2 பொதுத் தேர்வில் அகமதிப்பீட்டு முறையை, நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்" என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சங்கரநாராயணன் கூறினார்.


    அவர் கூறியதாவது: அனைத்து பள்ளிகளிலும், 10 ம் வகுப்பு வரை, தமிழை மட்டுமே பயிற்று மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். முதல் பாடவேளையில், நல்லொழுக்க கல்வி கற்பிக்க வேண்டும். கடந்த 2003 ம் ஆண்டுக்கு பின், பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும். ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, முதுகலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த, அனைத்து வகுப்புகளுக்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வில், அனைத்து பாடங்களுக்கும் அகமதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு திட்டத்தை, மேல்நிலை வகுப்பு வரை விரிவுபடுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கருதி, 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

    ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை, அறிவித்த தேதியில் இருந்து, தமிழகத்தில் அமல்படுத்த முதல்வர் முன்வர வேண்டும் என்றார்.

    No comments: