Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 9, 2013

    சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

    இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக்கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    "பொது சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது, பொதுப்பணத்தில் முறைகேடு செய்வது" ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண்டர்களில் விரும்பியவர்களுக்கு வளைந்து கொடுப்பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது.

    இந்தியா 94வது இடம்: "டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷன்ல்" 2013ம் ஆண்டுக்கான "ஊழல் குறைவு முதல் அதிகம் வரை" என்ற அடிப்படையில் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. மொத்தம் 177 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஊழல் குறைவாக உள்ள இப்பட்டியலில் டென்மார்க், நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியா, 94வது இடத்தில் உள்ளது. அப்படியெனில் இந்தியாவை விட, 93 நாடுகளில் ஊழல் குறைவாக உள்ளது.

    எதிர்க்க வேண்டும்: அரசு நிறுவனங்களில் நியாயமாக சான்றிதழ் பெறுவதற்கு, லஞ்சம் என்பது, அவசியமான ஒரு "ஆவணம்" என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. லஞ்சம் வாங்கிக்கொண்டு சட்டவிரோதமாகவும், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. லஞ்சம் வாங்குவதை அதிகாரிகள் ஒரு தொழிலாகவே பழகிவிட்டனர். மக்களும் அதற்கு துணை போகின்றனர்.

    லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும், இதனால் தண்டனை பெற்ற அதிகாரிகள் மற்றும் மக்களின் எண்ணிக்கை குறைவே. "மக்கள் நமக்கு எதற்கு வம்பு" என்று எதிர்க்காமல் இருப்பதே இதற்கு காரணம். அரசு ஒரு திட்டத்தை உருவாக்குகிறது என்றால் அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவது அதிகாரிகளின் கைகளில் உள்ளது.

    அதிகாரிகளே தவறு செய்யும் போது, மக்களின் வரிப்பணம் ஊழல் என்ற பெயரில் தனிநபரின் பாக்கெட்டுக்கு செல்கிறது. ஒழிக்க வேண்டியவர்களே ஊழல் செய்தால் எப்படி நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும்.அரசு அலுவலங்களில் மட்டும் அல்ல, முக்கிய பொது இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, போன் எண்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், மக்கள் தைரியமாக புகார் செய்ய முன்வர வேண்டும். ஊழல் வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் பெயர்களை, பொது இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஊழல்வாதிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அவர்களது வேலையையும் பறிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களிடம் அந்த எண்ணமே வராது.

    No comments: