Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 29, 2013

    இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன்?

    சம்பளத்திலும்,நியமனத்திலும் பாகுபாடு காட்டுகிறது என்பது விளங்கவில்லை.அவ்வாறு, தகுதியற்ற படிப்பாக இருந்தால் ,அதனை படிக்க வேண்டாம் என அறிவித்து விடலாமே !!!


    இடைநிலை ஆசிரியர்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு என்ன மாதிரியான என்னமோ தெரியவில்லை.யார் ஆட்சி கட்டிலில் அமர்ந்தாலும்,ஏளனமாக தோன்றுகிறோம் போல!!! அரசாணை எண 153 நாள் :03.06.2010 இதில் கூறப்பட்டுள்ள பட்டதாரி பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் பெற்று,இரண்டு ஆண்டுகள் ஆகிறது.ஆனால் 

    .இதே அரசாணையில் உள்ள 1743 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கடந்த அரசு மறந்தது.மறுத்தது.ஒருவழியாக தற்போதைய அரசு பதிவி ஏற்றவுடன் கல்வித்துறையில் கடந்த அரசு விட்டுச்சென்ற பணி நியமனங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கைகளில் முதல் நடவடிக்கை இந்த அரசாணையின் படி உள்ள 1743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தான்.நவம்பர் 2011 ஆம் ஆண்டில் துவங்கி ,டிசம்பர் 2011 இல் சான்றிதல் சரிபார்ப்பு நடத்தி முடித்து,அம்மாதமே பணி நியமனம் என அறிவித்து,பின்னர் வழக்கின் காரணமாக பணி நியமனம் செய்யாமல்,இழுத்து தற்போது இன்றுவரை 1743 மற்றும் அதற்கு பிறகு அறிவிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நியமனம் செய்யவில்லை.ஆனால்,இதே அரசாணையில் உள்ள பட்டதாரி பணியிடங்கள் நிரப்பப்பட்டு,அதன் பின் பல்வேறு நியமனங்கள் நிறைவேற்றப்பட்டு ,இப்போது 136 நிரப்பப்படாத பணியிடங்கள் முதற்கொண்டு நிறைவேறியாகிவிட்டது.ஆனால்,சென்ற அரசும் சரி,இந்த அரசும் சரி இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன்? சம்பளத்திலும்,நியமனத்திலும் பாகுபாடு காட்டுகிறது என்பது விளங்கவில்லை.அவ்வாறு, தகுதியற்ற படிப்பாக இருந்தால் ,அதனை படிக்க வேண்டாம் என அறிவித்து விடலாமே !!!

    5 comments:

    Anonymous said...

    ஆசிரியா் பயிற்சி பள்ளியைத் துவங்க அனுமதி அளிக்கும்போது தகுதியோ திறமையோ தேவைப் படுவது இல்லை ஆனால் அவற்றில் அப்பாவித் தனமாக பயின்று வௌி வருவோருக்குதான் தகுதி தேவைப்படுகிறது

    iniyan said...

    ஒரே ஒரு பாடம் (Subject) நடத்தும் ஆசிரியரை விட ஐந்து பாடங்களை (Subjects) நடத்தும் இடைநிலை ஆசிரியர்கள் எந்த விதத்தில் குறைந்து போனார்கள்?

    iniyan said...

    ஒரே ஒரு பாடம் (Subject) நடத்தும் ஆசிரியரை விட ஐந்து பாடம் (Subjects) நடத்தும் இடைநிலை ஆசிரியர்கள் எந்த விதத்தில் குறைந்து விட்டார்கள் ?

    Anonymous said...

    Sir.you are 100% correct (இந்த இரு அரசும் மாற்றான் தாய் மனதுடன் இடை நிலை ஆசிரியர்களை நடத்தி வருவதை நாம் உணர வேண்டும்.இனி இடை நிலை ஆசிரியர் பயிற்சி யாரும் படிக்க வேண்டாம்.கல்வித் துறையிலும் ஏக போக மரியாதை.(உயர் .மேல் நிலைப் பள்ளிகளில் கேவலம்,...,,.

    Anonymous said...

    கூட்டணிகளின் உயர்மட்ட தலைவர்கள் இடைநிலை ஆசிரியர்களாய் இருந்தால் நமக்கு நிச்சயம் பலன் பெற்றுத் தந்திருப்பர்! அவர்கள் தலைமை ஆசிரியர்கள் அன்றோ!