Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 14, 2013

    அரசுப் பள்ளி மாணவனுக்கு வீரதீரச் செயல் விருது! மோகனன்

    தனது உயிரை துச்சமாக மதித்து, ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் சுகந்தனின் சேவையைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வீரதீரச் செயல் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
    கடந்த ஆண்டு சித்திரை ஒன்றாம் தேதி அன்று, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே உள்ள காங்கயம் பாளையத்தில், வழக்கத்திற்கு மாறாக சற்றே ஆக்ரோஷத்துடன் காவிரியாறு ஓடிக்கொண்டிருந்தது. அன்று தமிழ்ப்புத்தாண்டு என்பதால், அந்த ஆற்றின் நடுவே உள்ள நட்டாத்தீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள கிராமப் பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருந்தது. அக்கோயிலுக்கு நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த கிருத்திகா, தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார் அவர் கோயிலுக்கு உள்ளே செல்வதற்கு முன் காவிரியாற்றில் இறங்கி கை, கால்களை கழுவ முனைந்தார். அவருடன் அவரது அம்மா பூங்கொடி, அவரது தங்கை ஷோபனா, அவரது தந்தை செந்தில் குமார் ஆகியோரும் ஆற்றில் இறங்கினர். ஆற்றுத் தண்ணீரில், கால் முட்டியளவு ஆழத்திற்குள் இறங்கிய கிருத்திகா, ஆற்றை நோக்கி அடுத்த அடி எடுத்து வைக்க, அந்த இடம் ஆழமானதாக இருக்கவே, கால் தவறி உள்ளே மூழ்க ஆரம்பித்தார்.

    அக்கா தண்ணீரில் மூழ்குகிறாள் என்பதைக் கண்ட ஷோபனா ஆற்றில் இறங்க, அவரைத் தொடர்ந்து அவளது அம்மா பூங்கொடியும் கதறியபடி ஆற்றில் இறங்குகிறார். மக்கள் கூட்டம் ‘ஹே’ எனக் கூக்குரலிட, இருவரையும் தாவிப்பிடித்து ஆற்றின் கரையில் விட்டு விட்டு, தனது மூத்த மகளைப் பார்க்கிறார் செந்தில்குமார். அவரைக் காணோம். சுற்றியிருந்த மக்கள் கூட்டம் வாய் பிளந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. மகளைக் காப்பாற்ற செந்தில் குமார், ஆற்றில் குதித்தார். “ஐய்யய்யோ” என மக்கள் கூட்டம் கூச்சலிடுகிறது.

    அவருக்கு முன், ஆற்றில் அம்பெனப் பாய்ந்தான் ஒரு சிறுவன். ஆற்று மணல் சரிவால், ஆழத்தில் சிக்கிக் கொண்ட அப்பெண்ணை, தேடிப்பிடித்து தண்ணீருக்கு மேலே தூக்கி வந்தான்.

    ஆற்று மணலில் சிக்கிக்கொண்ட கிருத்திகாவிற்கு வயது 16. உயிரைத் துச்சமென மதித்து ஆற்றில் குதித்த சிறுவனின் பெயர் சுகந்தன். வயது 13.மொடக்குறிச்சி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது 9-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

    இச்சம்பவம் குறித்து கிருத்திகாவிடம் கேட்டதற்கு, “கோயிலுக்கு எங்க குடும்பத்தோட போனேன். கை,கால் கழுவிட்டு கோயிலுக்கு உள்ளே போகலாம்னு ஆத்துல இறங்கினேன். கால் முட்டி அளவுக்கு ஆழம் இருந்துச்”. சரி, இன்னும் கொஞ்சம் உள்ளே போயி கழுவலாம்னு காலை எடுத்து வச்சேன். அது மிகவும் ஆழமாக இருந்தது எனக்குத் தெரியவில்லை. அங்கே இருந்த மணல் சரிந்து ஆழத்திற்குள் மூழ்கி விட்டேன். எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் ஆற்றிற்குள் மூழ்கியதும் மயக்கமடைந்து விட்டேன்” என்றார்.

    இவரையடுத்து, இவரது அம்மா பூங்கொடி தொடர்ந்தார்: “என் மூத்த பொண்ணு தண்ணிக்குள்ள போனதும், என் சின்னப் பொண்ணு ‘ஐயோ...அக்கா!’ன்னு சொல்லிக்கிட்டே அவளும் ஆத்துக்குள்ள இறங்கிட்டா. நானும் ‘ ஐயோ... என் பொண்ணு தண்ணிக்குள்ள மூழ்கிடுச்சி. காப்பாத்துங்க, எம்புள்ளைய காப்பாத்துங்க’ன்னு கத்திக்கிட்டே ஆத்துக்குள்ள போனேன். ஊரே வேடிக்கை மட்டும்தான் பார்த்துச்”. யாரும் காப்பாத்த வரல” என்று திகைப்பு கலந்த குரலோடு சொல்லி நிறுத்தினார்.

    அதைத்தொடர்ந்து அவரது தந்தை செந்தில் குமார் தொடர்ந்தார். “என் புள்ளைங்களுக்கும், என் மனைவிக்கும் நீச்சல் தெரியாதுங்க. எனக்கு ஓரளவுக்குதான் நீச்சல் தெரியும். பெரிய பொண்ணு தண்ணிக்குள்ள போனதுமே, என் சின்னப் பொண்ணும் என் சம்சாரமும் தண்ணிக்குள்ள தடதடன்னு இறங்கிட்டாங்க. அவங்கள காப்பாத்தி கரையேத்திட்டு, திரும்பிப் பார்க்கிறேன். என் பெரிய பொண்ணைக் காணோம். அவளும் மேலே வந்திருப்பான்னு பார்த்தேன். எம்புள்ளையக் காணோம். உடனே தண்ணிக்குள்ள குதிச்சுப் பார்த்தேன். எனக்கு முன்ன ஒரு பையன் குதிச்சு, எம்புள்ளைய மேலே தூக்கி வந்தான். நானும் அவனுமா சேர்ந்து கரைக்கு தூக்கியாந்தோம்.

    அப்ப என் பிள்ளையோட கண்ணு நிலைகுத்திப் போச்சு. தண்ணி குடிச்சிருக்காளோன்னு வயித்த அழுத்திப் பார்த்தேன். தண்ணி ஏதும் குடிக்கல. மூச்சு ஏதும் இல்ல. அவ வாய்க்குள்ள என் வாயை வச்சு ஊதினேன். என் பொண்ணு அதன் பிறகு சற்று மூச்சு விட்டா. உடனே அங்க இருந்த கோயில் தர்மகர்த்தா ரெண்டு பேரும் அவங்க வண்டியில வச்சு, பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு கொண்டுட்டுப் போனாங்க. பின்னாடியே நாங்களும் போனோம். அங்கே கிருத்திகாவிற்கு முதலுதவி செய்து, அவளை காப்பாற்றிய மருத்துவர்கள், ‘ஆற்றில் மூழ்கிய ஐந்து நிமிடங்களுக்குள் உங்கள் மகளை வெளியே கொண்டு வந்து விட்டீர்கள். அதனால, பிழைக்க வைக்க முடிஞ்சது. இன்னும் சில நிமிடங்கள் தாமதித்திருந்தால், உங்கள் மகளை நீங்க பார்த்திருக்க முடியாது’ என்றனர். அப்போதுதான் ‘எம்பொண்ணைக் காப்பாத்தின அந்தப் புள்ளை நீடூழி வாழ வேண்டும்’ என கண்ணீர்ப் பெருக்குடன் நினைத்தேன். அன்று மாலை, அந்தச் சிறுவனே எங்கள் வீடு தேடி வந்தான். வந்ததும் ‘அக்கா நல்லா இருக்காங்களா?’ என்று கேட்டான். ‘நல்லா இருக்காங்க... நீ யாரு தம்பி?’ என்று கேட்டேன். ‘நான்தான் அந்த அக்காவை தண்ணியிலருந்து மேல தூக்கி வந்தேன்’ என்றான். மனம் நெகிழ்ச்சியாயிடுச்சு. ‘தம்பி! நீ எம்பொண்ண தூக்கி வரல... காப்பாத்திக் கொடுத்திருக்கப்பா!’ என நன்றிப் பெருக்குடன் கூறினேன்” என்றார். “அந்தத் தம்பி மட்டும் இல்லன்னா, இன்னிக்கு எம் பொண்ணு இருந்திருக்க மாட்டா” என உணர்ச்சிப் பெருக்கோடு கூறினார் கிருத்திகாவின் தாய் பூங்கொடி.

    சிறுவன் சுகந்தனின் வீர தீரச் செயல் குறித்து பள்ளி ஆசிரியர்கள் அரசுக்குப் பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து, வீர தீரச் செயலுக்கான தேசிய விருது பெற, சுகந்தன் தேர்வு செய்யப்பட்டு தில்லிக்கு வரவழைக்கப்பட்டான்.

    குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அவனுக்கு விருது வழங்கி கௌரவித்தார். குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது குறித்து ஊரிலும் பள்ளியிலும் ஒரே மகிழ்ச்சி வெள்ளம். தில்லி சென்று திரும்பிய சுகந்தன், ஊர் திரும்பிய அன்றே அவனிடம் தொடர்புகொண்டு பேசினோம். “நான், எங்க அப்பா, அம்மா, தங்கச்சி எல்லோரும் அன்னைக்கு கோயிலுக்கு வந்திருந்தோம். எங்க அப்பா, அம்மா, தங்கச்சி எல்லோரும் கோயிலுக்குப் போயிகிட்டிருந்தாங்க. நான் ஆத்துல இருக்கிற பாறையில நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு ஐயோ! என் மகளை காப்பாத்துங்கன்னு குரல் வந்துச்சு. பார்த்தா... ஒரு அக்கா ஆத்துத் தண்ணியில மூழ்கிக்கிட்டிருந்தாங்க. அடுத்த நிமிஷமே ஆத்துல குதிச்சிட்டேன். தண்ணிக்குள்ளே கண் விழிச்சுப் பார்த்தேன். அப்போ, அந்த அக்கா மயக்கமான நிலையில உள்ளே மூழ்கியபடி கிடந்தாங்க. தலைமுடியை பிடிச்”, தூக்கிக்கிட்டு மேலே வந்தேன். அந்த அக்காவோட அப்பா வந்தாரு. ரெண்டு பேரும் சேர்ந்து கரைக்குக் கொண்டு போனோம். அப்புறமா அந்த அக்கா வீட்டுக்குப் போனேன். அவங்க நல்லா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அப்புறம் என் வீட்டுக்கு போயிட்டேன்” என்றான்.

    இவனது தந்தை ஈஸ்வரனிடம் இதுபற்றிக் கேட்டதற்கு, “எங்க ஊரு எம். வேலம்பாளையம்ங்க. அங்க இருந்து நட்டாத்தீஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்தோட வந்திருந்தோம்ங்க. அப்ப பார்த்து, எம்பையன் ஆத்துல நின்னுக்கிட்டிருந்தான். நாங்க கோயிலுக்கு சாமி கும்பிடப் போயிருந்தோம். அப்பத்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கு. ‘ஓர் உசிரக் காப்பாத்திருக்கியே... உன்னை என்ன சொல்லி பாராட்டறதுப்பா!’ என பிரமிச்சுப் போனேன். அவன் படிக்கிற பள்ளிக்கூடத்து வாத்தியார்கள் மூலமா, அவனை தேசிய விருதுக்குப் பரிந்துரை பண்ணினாங்க. ஜனாதிபதி கையால எம்பையன் விருது வாங்கனதைப் பார்த்துட்டு, கண்ணுல தண்ணி வந்துருச்சுங்க” என்றார்.

    படித்து, என்னவாக விரும்புகிறாய் என்று ”கந்தனிடம் கேட்டதற்கு, “ நான் நல்லா படிச்சு, ஓர் ஆர்மி ஆபீஸரா வரணும்னு ஆசைப் படறேன்” என்று கூறினான்.

    No comments: