Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 11, 2015

    ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு; நாளை முதல் துவக்கம்

    ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நாளை(ஆக.,12) துவங்கி, ஆக., 29 வரை நடக்க உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நாளை (ஆக., 12) காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.


    வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தற்போது பணிபுரியும் பள்ளியில் ஒரு முழு கல்வி ஆண்டு பணியாற்றிருக்க வேண்டும். முற்றிலும் பார்வையற்றோர், 40 சதவீதம் அதற்கு மேலும் ஊனமுடைய மாற்றுத்திறனாளி சான்று வைத்துள்ளோர், ராணுவத்தில் பணியாற்றுவோரின் மனைவி, இருதய மாற்று, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டோர், கடும் பாதிப்பிற் குள்ளான புற்றுநோயாளிகள், விதவை, 40 வயது கடந்த முதிர் கன்னியருக்கு விலக்கு அளிக்கப் படுகிறது, என முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தெரிவித்தார்.

    கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் விவரம்

    தேதி                             பங்கேற்பவர்கள்

    ஆக., 12                      மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாறுதல் கோரும் அரசு, நகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் உடற்கல்வி, கலை, இசை, தையல், இடைநிலை ஆசிரியர்கள்

    ஆக., 14             பதவி உயர்வு கோரும் அரசு, நகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்.

    ஆக., 16                      மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாறுதல்   கோரும் அரசு, நகராட்சி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் உடற்கல்வி, கலை, இசை, தையல், இடைநிலை ஆசிரியர்கள்.

    ஆக., 18                               பதவி உயர்வு கோரும் அரசு, நகராட்சி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்.

    ஆக., 22              மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் அரசு நகராட்சி, மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள்.

    ஆக., 23                           மாவட்டம் விட்டு மாறுதல் கோரும் அரசு, நகராட்சி, மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள்.

    ஆக., 24                               பதவி உயர்வு கோரும் அரசு, நகராட்சி, மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள், நேரடி நியமனம் பெற்ற 55 முதுகலை ஆசிரியர்கள்,

    ஆக., 26-29 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்

    2 comments:

    Unknown said...

    ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு 3 ஆண்டுகளில் இருந்து 1 ஆண்டாக குறைத்ததாக சொல்லி அமைதியாக 2 ஆண்டுகள் என்ற நிலைமையை புகுத்தி விட்டார்கள் .

    Unknown said...

    Bt Asst Social who wants mutual transfer from & near Madurai to Kayathaar GHSS Tuticorin Dist (Near Tirunelveli) can contact 9688947422
    Bt Asst Social மதுரை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுக்கு ( திருநெல்வேலிக்கு மிக அருகில் )Mutual Transfer வேண்டுவோர் 9688947422 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.