திண்டுக்கல் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் தயாரித்த ஆர்.சி., கிளைடர் விமானங்கள் பறந்து சாதனை செய்தன. திண்டுக்கல் ஆர்.வி.எஸ். ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லுாரியில் நேற்று தேசிய அளவிலான விமான தொழில் நுட்ப பயிலரங்கம் நடந்தது. 60 கல்லுாரிகளை சேர்ந்த 120 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் தயாரித்த ஆர்.சி., கிளைடர், ஆர்.சி., பிளேன், ஆர்.சி.,ஜெட் ஆகிய விமானங்கள் பறக்க விடப்பட்டன. நேற்று மாலை 3 மணிக்கு பறக்க துவங்கிய இந்த விமானங்களை பொதுமக்களும், மாணவர்களும் கண்டுகளித்தனர்.
இந்த விமானங்கள் 500 கிராம் எடை கொண்டவை. இதில் கேமராவை பொருத்தி உளவு பார்க்கலாம். பல ரகசிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இதில் இறக்கைகள், இன்ஜின் பாகம் ஆகியவற்றை மும்பை மற்றும் வெளிநாடுகளில் வாங்கி மாணவர்கள் இணைத்துள்ளனர். இதில் 250 மில்லி ஒயிட் பெட்ரோல் ஊற்றப்பட்டது.
இது 300 அடி உயரத்தில் பறந்தன. இந்நிகழ்ச்சியில் ஆர்.வி.எஸ்., கல்லுாரி தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணசாமி, கல்லுாரி இயக்குனர் சரவணன், மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி முருகன் பங்கேற்றனர். மாணவர்களே தயாரித்தனர்.
ஏரோநாட்டிக்கல் துறை தலைவர் ரங்கசாமி கூறியதாவது:
ஏரோநாட்டிக்கல் துறையைச் சேர்ந்த மாணவர்களே தயாரித்த விமானங்களை பறக்க விட்டோம். இவை தயாரிக்க ரூ.60 ஆயிரம் செலவானது. காற்றின் வேகம் அதிகமானதால் பார்வையாளர் கூட்டத்தில் இறங்காமல் தடுக்க முயற்சித்தும் பலனில்லாமல் போனது. இதனால் இறங்கும் போது சிக்கல் ஏற்பட்டது. எனவே இன்னும் பல புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, மாணவர்களுக்கு பல புதுமையான விமானங்களை தயாரிக்க கற்றுத்தருவோம், என்றார்.
No comments:
Post a Comment