அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள தொழில்நுட்ப கல்லுாரிகளில், ஏழு கல்லுாரிகள், இந்த ஆண்டு, பல்கலை அனுமதி பெற்று, மாணவர் சேர்க்கையை நிறுத்தி விட்டன.
அதேநேரத்தில், இரண்டு கல்லுாரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., நிறுத்தம்: கோவை, கீர்த்திகா ஸ்கூல் ஆப் பிசினஸ் மற்றும் செங்குந்தர் பி ஸ்கூல் பார் உமன்.எம்.சி.ஏ.,நிறுத்தம்:
ஈரோடு, சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி.பி.இ., - பி.டெக்.,கில் சேர்க்கை நிறுத்தம்: சேலம், விவேகானந்தா இன்ஜி., மகளிர் கல்லுாரி;துாத்துக்குடி, இன்பேன்ட் ஜீசஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி; திருநெல்வேலி, அருள் காலேஜ் ஆப் டெக்னாலஜி; திண்டுக்கல், கொடைக்கானல் காலேஜ் ஆப் டெக்னாலஜி.இந்த கல்லுாரிகள் அண்ணா பல்கலையில், இணைப்புக்கு விண்ணப்பிக்கவில்லை.
அனுமதி மறுப்பு:
கோவை, இண்டஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள, அர்ச்சனா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில், பல்வேறு விதிமுறைகள் காரணமாக, மாணவர் சேர்க்கை நடத்த, அகில இந்திய கல்வி கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.
No comments:
Post a Comment