Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 26, 2015

    தமிழக கால்நடை துறையில் 1180 பணியிடங்கள

    தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் 1180 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 8-ம் வகுப்பு படித்தவர்கள், 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு: தமிழக அரசுத் துறைகளில் ஒன்றான கால்நடை பராமரிப்புத் துறையில் தற்போது கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    மொத்தம் 1101 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 725 இடங்களும், கால்நடை ஆய்வாளர் பயிற்சிபணிக்கு 294 இடங்களும், அலுவலக உதவியாளர் பணிக்கு 36 இடங்களும், கதிரியக்கர் (ரேடியோகிராபர்) பணிக்கு 24 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பணிகளுக்கு 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்...
    வயது வரம்பு :
    விண்ணப்பதாரர் 1-7-14-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர் 35 வயது வரையும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவினர் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி :கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு 8-ம்வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கதிரியக்கர், ஆய்வக உடனாள், ஆய்வுக்கூட தொழில்நுட்பர், மின்னாளர் போன்ற பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், குறிப்பிட்ட பயிற்சி அனுபவமும் தகுதியாக கோரப்பட்டு உள்ளது. கால்நடை ஆய்வாளர் பயிற்சி பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    கட்டணம்:
    விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.100-க்கான டி.டி. இணைக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், விதவைகள், திருநங்கையர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அவர்கள் கட்டண விலக்கு பெறும் உரிமைக்கான சான்று இணைக்க வேண்டும்.
    தேர்வு செய்யும் முறை:
    அலுவலக உதவியாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணல்அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்ற பணிகளுக்குஎழுத்து தேர்வு நடத்தப்பட்டு அதிக மதிப்பெண் பெறுபவர்கள் இனச்சுழற்சி அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
    விண்ணப்பிக்கும் முறை:
    விண்ணப்பங்களை மாவட்ட தலைநகரங்களில் உள்ள மண்டல இணைய இயக்குனர் அலுவலகம் மற்றும் கோட்ட உதவி இயக்குனர் அலுவலகங்களில் அலுவலக நேரங்களில் ரூ.10 செலுத்தி நேரிலோ, அஞ்சல் மூலமோ பெற்றுக் கொள்ளலாம். 15-9-15-ந் தேதி வரை விண்ணப்பம் பெற முடியும். www.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம்.
    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இயக்குனர், கால்நடை பராமரிப்பு (ம) மருத்துவபணிகள், மத்திய அலுவலக கட்டிடம், பகுதி-2, டி.எம்.எஸ். வளாகம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை பெரிய எழுத்துகளில் குறிப்பிட வேண்டும்.
    முக்கிய தேதி:
    விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் : 15-9-15
    கால்நடை பல்கலைக்கழகம் மற்றொரு அறிவிப்பின் படி தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 79 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 12 படிப்புடன், தட்டச்சு தெரிந்தவர்கள், தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு இதில் பணி வாய்ப்பு உள்ளது.
    இது பற்றிய விவரங்களை www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 16-9-15-ந் தேதி ஆகும்.

    No comments: