'14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்., 2 ல் நாடு தழுவிய ஸ்டிரைக்கில் பல லட்சம் பேர் பங்கேற்பர்,'' என, மதுரையில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாநில அமைப்பு செயலாளர் ஷியாம் நாத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:உணவு உற்பத்தியில் தன்னிறைவு, மருத்துவம், போக்குவரத்து, கல்வி போன்ற பொது சேவையில் உன்னதமான வெற்றியை தேடித் தந்துள்ளன அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள். இவற்றின் சேவைகளை அளவிடாமல், செலவை மட்டும் அளவுகோலாக கொண்டு, சீரமைப்பு என்ற பெயரில் துறைகளை மத்திய, மாநிலஅரசுகள் கண்டுகொள்வதில்லை.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஐம்பது சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைத்து, 1.1.2011 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இதுபோன்ற 14 கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தம் நடக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment