இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், ஆலோசனை கூட்டம்சேலத்தில் நேற்று நடந்தது.இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின், தமிழ் மாநிலக்குழு சார்பில், வரும், செப்டம்பர், 2ம் தேதி, அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, நேற்று, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், சேலம் சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது.சட்ட ஆலோசகர் மோகன் வரவேற்றார். மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கோவிந்தன் பேசியதாவது: புதிய பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். மாணவரின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளை மூட கூடாது.ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.
வரும், செப்டம்பர், 2ம் தேதி நடக்கும், 16வது அகில இந்திய பொதுவேலை நிறுத்த போராட்டத்தில், அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வம், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட தலைவர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இணை செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment