தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 4 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; திருமண உதவித் திட்டத்தின் கீழ் 2,154 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர்ஜெயலலிதாசுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றி வைத்து பேசியதாவது:
இந்திய நாட்டின் விடுதலைக்காக உரிமைக் குரல் எழுப்பி, நாளெல்லாம் சிறை கண்டு, அடிபட்டு, மிதிபட்டு, நாடி நரம்புகள் வலுவிழந்து, மாண்டு போன பெயர் தெரியாத ஆயிரக்கணக்கான சுதந்திரத் தியாகிகள்; தூக்குக் கயிற்றை துச்சமென மதித்து முத்தமிட்ட தென்புலத்து வீரபாண்டிய கட்டபொம்மன்; புலியெனச் சீறிய பூலித்தேவன்;வீரமிகு மருது பாண்டியர்; தீரமிகு தீரன் சின்னமலை; தாய்நாட்டுக் கொடி காக்க தன்னை மாய்த்துக் கொண்ட கொடி காத்த திருப்பூர் குமரன்; தாய் நாட்டுக்காக தன்னையே மாய்த்துக் கொண்ட வீர வாஞ்சிநாதன், பாட்டுக்கொரு புலவன் பாரதி; தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்" என்று சொன்ன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; வீரமங்கை வேலு நாச்சியார்; வீரமங்கை வேலுநாச்சியாரின்படைத் தளபதி வீரத் தாய் குயிலி; வட இந்தியாவைச் சேர்ந்த பகத் சிங், குருதேவ், ராஜகுரு என எண்ணற்ற வீரர்களை நெஞ்சில் நினைத்து போற்றுவதற்கும்; அவர்களின் புகழை பாடுவதற்கும்; அவர்களின் தியாகங்களை நினைவு கூரவும் இந்தச் சுதந்திரத் திருநாளை நாம் இங்கே இன்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
1 comment:
4 ஆண்டுகளில் 72843 ஆசிரியர்களை நியமித்ததாக கூறும் முதல்வர் அவர்கள் அதே 4 ஆண்டுகளில் பணி நிறைவு பெற்றவர்கள் எத்தனை பேர், இயற்கை எய்தியவர்கள் எத்தனை பேர்,விருப்ப ஓய்வு பெற்றவர் எத்தனை பேர் என்ற விவரத்தையும் கூறியிருந்தால் புதிய நியமனங்கள் எத்தனை என்ற விவரத்தை அறிந்திருக்கலாம்.
Post a Comment