ஜாக்டோ ஆசிரியர் குழுவின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களும், தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 28 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளன. இவர்கள் வரும், 8ம் தேதி, மாவட்டத் தலைநகரங்களில், பேரணி நடத்த உள்ளனர். இந்நிலையில், மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகமும் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது. மார்ச், 12ம் தேதி சென்னையில், 2,500 தொழிற்கல்வி ஆசிரியர்கள், கோட்டை நோக்கி பேரணியாகச் சென்று மனு அளிக்க உள்ளனர்.
No comments:
Post a Comment