திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கணித மாதிரி வடிவமைத்தல் போட்டிகள் நடந்தது. இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கணித மாதிரி வடிவமைத்தல் போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர் பங்கேற்றனர். சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்றதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி தான் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது அரசு உதவி பெறும் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இப்பள்ளித்தலைமையாசிரியர் சொக்கலிங்கம் கணித மாதிரி வடிவமைத்தல் போட்டிக்கான தேர்விற்கு மாணவ மாணவியரை தயார் படுத்தினார். ஆசிரியை முத்துமீனாள் மாணவிகளை திருச்சி அண்ணா கோளரங்கத்திற்கு அழைத்துச்சென்று போட்டியில் பங்குபெறச் செய்து அழைத்து வந்தார். மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்றதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment